Published : 19 Sep 2014 12:08 PM
Last Updated : 19 Sep 2014 12:08 PM
எம்.எஸ் கர்னாடக சங்கீதத்தின் ஆன்மா என்று கட்டுரையாளர் எழுதியுள்ளார். அவர் கர்னாடக சங்கீதத்துக்கு மட்டும் ஆன்மா அல்ல, தமிழ் இசைக்கும் அவரே ஆன்மா, அரசி எல்லாம். பாமரனுக்குக்கூட எம்.எஸ்ஸைத் தெரியும். காரணம், அவர் குரல். மீரா படத்தில் அவர் பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்' பாடல் இன்றளவுக்கும் காதில் ரீங்காரமிடும்.
தன்னை மறந்த மோன நிலையில் அவர் பாடிய பாடலைக் கேட்டவர்கள் மயங்கியது உண்மை. அவர் பாடல் கண்ணனை நேரில் நிறுத்தியது. காரணம், தமிழும் தேன், அவர் குரலும் தேன். அதனால்தான் அவர் குரலைப் பண்டிதனும் ரசித்தான்; பாமரனும் ரசித்தான். ராஜாஜி இயற்றி எம்.எஸ். பாடிய ‘குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' எனும் பாடல் ஒரு தேவகானம். இந்த ஒரு பாடலே எம்.எஸ்ஸைப் பல பல நூற்றாண்டுகள் நினைவில் வைக்கும்.
- கேசவ்பல்ராம்,திருவள்ளூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT