Published : 05 Jul 2018 09:07 AM
Last Updated : 05 Jul 2018 09:07 AM
செல்போனில் விழிப்புணர்வு அவசியம்
‘ஒ
வ்வொரு செல்போனிலும் ஒரு ஆபாசத் திரையரங்கம் இருக்கிறது’ என்று கூறும் எழுத்தாளர் இமையத்தின் நேர்முகத்தில், நம் சமூகம் தெளிவடையப் பயனுள்ள சில தகவல்களைப் பதிவுசெய்துள்ளார். இன்றைய ஸ்மார்ட்போன்கள் ஆக்கபூர்வமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும் ஆபாசமான தகவல்களையும் உள்ளடக் கிப் பரிமாறுவதால், இந்தச் சமூகத்தில் கேடுகளை விளைவிக்கின்ற நவீன ஊடக மாக உள்ள அதன் ஆபத்துகளையும் உணர்த்துகிறார். குறிப்பாக, செல்போனைக் கையாளும் இன்றைய இளைஞர்களுக்கு இந்த விழிப்புணர்வு அவசியம் வேண்டும். பயனாளிகளின் எண்ணம் தெளிவடைந்தால், ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டில் நன்மைகளை அதிகம் நுகர்வதற்கும் வழியுண்டு.
- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.
இயற்கை தந்த பரிசு
கு
ழந்தைக்குச் சோறூட்டும் தாய்க்கு நிலவு ஒரு காட்சிப் பொருளாக, காதலியின் அழகினை ஒப்பிடும் காதலனுக்கு, தமிழ்க் கவிஞனுக்கு உவமைப் பொருளாக எனப் பல்வேறு நிலைகளில் நாம் கண்டு களித்துக்கொண்டிருக்கும் வான் நிலவு, மனிதன் தொட்டுவிட்டு வந்த ஒரு கிரகம் எனினும், அறிவியலுக்கு உட்படாது தன் அழகின் மூலமே மனிதனை ஈர்க்கும் தன்மைகொண்டு கற்பனையில் உலா வருவது இயற்கை தந்த கூடுதல் பரிசுதானே!
- கே.ராமநாதன், மதுரை.
பொருளாதார விழிப்புணர்வு அவசியம்
ஜூ
லை -2 வெளியான ‘டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு: ஆபத்தான சமிக்ஞை!’தலையங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததது. இன்றைக்கு பொருளாதார விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. சாதாரண மக்களும் பொருளார அறிவைப் பெறும் வகையில் தலையங்கம் அமைந்துள்ளது. சமூக விழிப்புணர்வைப் போலவே பொருளாதார விழிப்புணர்வும் அவசியம்!
- க.அம்சப்ரியா, பில்சின்னாம்பாளையம்.
வள்ளலார் வழியில்..
ஜூ
லை - 3 அன்று வெளியான ‘காவிரிக் கரையில் கலங்கரை விளக்கம்’ என்ற கட்டுரை படித்தேன். கும்பகோணம் கொட்டையூரில் வள்ளலார் பள்ளியின் பெருமைகள் அழகாக எழுதப்பட்டுள்ளன. அதில் பங்குபெறும் ஒருவராக இதைப் பதிவுசெய்கிறேன். என் பேரன் உடல்நலம் குன்றி மருத்துவ மனையில் இருந்தபோது, சிறப்புப் பிரார்த்தனை செய்தது மனதை நெகிழச்செய்தது. இங்கு வள்ளலாரின் ஒழுக்கம், பண்பு போதிக்கப்படுவது சிறப்பு.
- ஜீவன். பி.கே., கும்பகோணம்.
வியப்பில் ஆழ்த்திய மனிதர்
ஜூ
லை - 3 அன்று சிறப்புப் பக்கம் பகுதியில் வெளியான ‘திசையெங்கும் திருவள்ளுவர் சிலையுடன் வலம்வரும் மனிதர்’ என்கிற கட்டுரை படித்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறள் பயிற்சி வகுப்புகளை நடத்துவதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்குத் திருக்குறள் சிறப்புப் போட்டிகள் நடத்தி திருவள்ளு வர் தினத்தன்று விழா எடுத்துப் பரிசுகள் வழங்குதல், வீடுகள், பள்ளிகளுக்கு வள்ளுவர் சிலை செய்து கொடுத்தல் போன்ற அரும்பணிகளைத் தொடர்ந்து ஆற்றி ஒற்றை மனிதராகத் திருக்குறளைப் பரப்பிவரும் திருக்குறள் தொண்டர் கோவை நித்தியானந்த பாரதி வியப்பில் ஆழ்த்திய மனிதர்.
- அ.கற்பூர பூபதி, சின்னமனூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT