Published : 02 Jul 2018 09:18 AM
Last Updated : 02 Jul 2018 09:18 AM
‘இந்து தமிழ்’ திசை எட்டும் பரவட்டும்!
‘இ
ந்து தமிழ்த் திசை’ நாளிதழ் இன்னும் சில மாதங்களில் ஆறாம் ஆண்டைத் தொடங்கவிருக்கும் மகிழ்வான தருணத்தில், பல வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று ‘இந்து தமிழ்த் திசை’ என்று புதுப் பெயரேற்று புதுப் பொலிவுடன் வெளிவந்திருப்பது மகிழ்வளிக் கிறது. தமிழின் அடையாளமாகத் திகழும் மௌனி, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், லா.ச.ரா, புதுமைப்பித்தன், சி.மணி, ஜி.நாகராஜன், சுந்தரராமசாமி ஆகியோரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது ‘இந்து தமிழ்’ நாளிதழ். உலகத் தமிழர்களின் பெருமிதக் குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கும் ‘இந்து தமிழ்’, இளம் படைப்பாளர்களையும் இளம் வாசகர்களையும் அதிக மாய்ப் பெற்ற நாளிதழாய், தரமான கட்டுரைகளைத் தமிழுக் குத் தந்துகொண்டிருக்கிறது.
தமிழ் மக்களின் மனசாட்சியாக ஒலித்துக்கொண்டிருக்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு வாசகர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாசகர்களோடு இணைந்து பயணிக்கும் உங்கள் அன்புக்கு நன்றி. பள்ளி,கல்லூரி மாணவர்களின் படைப்புகளுக்கான மாணவர் பக்கத்தை எதிர்வரும் ஆறாம் ஆண்டில் எதிர்நோக்குகிறேன். குழந்தைகளுக்கான ‘மாயா பஜார்’ இணைப்பிதழில் குழந்தைகளின் படைப்புகளே அதிகம் இடம்பெறச் செய்ய வேண்டும். ‘இந்து தமிழ்’ நடுப்பக்கம் எல்லோராலும் பேசப்படும் அளவு உள்ளது. ‘மாணவப் பத்திரிகையாளர் திட்ட’த்தை அறிமுகப் படுத்தி நல்ல பத்திரிகையாளர்களை உருவாக்குங்கள். ‘தமிழ் திசை’ பதிப்பகத்தின் சார்பில் தரமான நூல்கள் இன்னும் அதிகமாக வெளிவர வாழ்த்துகள்.
- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
12 ஆண்டுப் போராட்டம்
எ
ன்னுடைய தந்தை ஆர்.சிவன்பிள்ளை சுதந்திரப் போராட்டத் தியாகி. அவர் போலீஸ் லாக்கப்பில் பட்ட அடி, உதையினால், ஓய்வூதியம் கிடைப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். அவருடைய மனைவிக்கும் பென்சன் கிடைக்கவில்லை. குடும்பம் வறுமை நிலையில் தடுமாறுகிறது. நிலுவை ஓய்வூதியம் கேட்டு 12 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். எந்தப் பயனும் இல்லை. தமிழக அரசு பல பிரிவினருக்கும் பல உதவிகளை வழங்கிவருகிறது. எங்கள் குடும்பத்துக்கும் அரசு மனம் வைத்து உதவிட வேண்டுகிறேன்.
-தக்கலை சந்திரன், நிறுவனத் தலைவர்,
தமிழ்நாடு தியாகிகள் கழகம், தக்கலை.
ரத்த தானம்:
முந்துவது நோக்கமல்ல!
ஜூ
ன் 23-ல் ‘குருதி மா வள்ளல் கோன்’ என்ற தலைப்பில் வெளியான செய்தியில், நான் 170 முறை ரத்ததானம் செய்தது குறித்து பாராட்டப்பட்டிருந்தது. சென்னையைச் சேர்ந்த ராஜசேகர் 187 முறை ரத்ததானம் செய்ததைப் பாராட்டிப் பேசிய நான், அதைப் போலவே நானும் செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அவரை முந்த வேண்டும் என்று நான் கூறியதாக வெளியாகி உள்ளது.
- எஸ்.எஸ். சுகுமார்,
கண் மருத்துவர், ஈரோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT