Published : 09 Jul 2018 09:03 AM
Last Updated : 09 Jul 2018 09:03 AM

இப்படிக்கு இவர்கள்: பொறியியல் கல்வியின் அவலநிலை

பொறியியல் கல்வியின் அவலநிலை

நெ

ஞ்சை முள்ளாகத் தைத்தது, ‘பொறியியல் கல்வி அவலத் தின் பேசப்படாத பக்கம்’ ஜூலை - 6 அன்று வெளியான கட்டுரையின் கருத்து. இதன் அவலநிலை இப்படி இருந்தும், பொறியியல் கல்வி மீது மக்கள் கொண்டிருக் கும் மோகம் இன்னும் குறையவில்லையே? ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்விச் சேர்க்கையில் அரசு செய்யும் பகட்டு அதிகரித்தே வருகிறது. இந்த ஆண்டு ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் ஆன்லைன் சேர்க்கை. அடுத்த ஆண்டில் என்ன புதுமையோ? பணிபுரியும் பேராசிரியர்களுக்குப் போதிய ஊதியமில்லை; பணிப் பாதுகாப் பும் இல்லை என்பது கசப்பான உண்மை. ஆனால், அதைவிடப் பல மடங்கு கசப்பானது, பல லட்சங்கள் செலவழித்துப் படித்து முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல் அல்லல்படும் மாணவர்களின் நிலை. திரைப்படத் தொழில் பாதிப்பால், திரை யரங்கங்களை இடித்துவிட்டுப் பல்பொருள் வணிக அரங்குகளாக மாற்றியதை அறிவோம். அந்நிலை, பொறியியல் கல்லூரிகளுக்கும் நேரிடலாம்.

- மூர்த்தி, துண்டலம்.

தமிழ் மாறன் உந்துசக்தியாகிறார்

ஜூ

லை - 6 அன்று வெளியான ‘வளரும் படைப்பாளிகள் வளர்க்கும் பதியம்’என்கிற கட்டுரை படித்தேன். பதியம் இலக்கியச் சங்கமம் அமைப்பின் நிறுவனர், பேராசிரியர் தமிழ் மாறனின் முயற்சி போற்றுதலுக்குரியது! எங்கள் ஊரில் நூலக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். வாசகர்களை ஒருங்கிணைத்து, நூலகத்தில் மாணவ - மாணவிகளுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்திவருகிறோம். போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி, இலவச இந்தி, ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளும் நடத்திவருகிறோம். தமிழ் மாறன் எங்களுக்கு மற்றுமொரு உந்துசக்தியாகக் கிடைத்திருக்கிறார்.

- சுந்தர்.அழகேசன், திருச்சுழி.

லண்டன் கட்டுரை ஆவலைத் தூண்டிவிட்டது

றிமுகமே அசத்தலாக உள்ளது ‘லண்டன்’ கட்டுரை. வாசித்தேன். எளிமையான எழுத்து நடை. அதே சமயம், அதன் தாக்கம் மிகப் பிரமாண்டம்! ‘பேருருவங்களே சிறு புள்ளிகளாகும்போது நீ யார் எவ்வளவு அற்பன்!’- சிந்திக்க வைக்கும் வரிகள். ‘பிரிட்டிஷ் ஏர் விமானம் புறப்படுகிறது, பிரெஞ்சு ஒயின் வாசம் விமானத்தினுள் கசிகிறது’என்ற வரிகளை வாசிக்கும்போது நாமும் விமானத்தினுள் இருப்பதுபோல ஓர் உணர்வு.

- பா.தங்கராஜ், திப்பணம்பட்டி.

தமிழே என்றாலும் தப்பு தப்புதான்

லை ஞாயிறு பக்கத்தில் பி.எஸ்.குமாரசாமிராஜா பற்றிய கொ.மா.கோதண்டத்தின் கட்டுரை (ஜூலை 8) படித்தேன். ஒடிசா மாநிலத்தில் ஆளுநராக அவர் பதவியேற்றுக்கொண்டபோது, ஆங்கிலம் தெரிந்திருந்தும் தமிழிலேயே உரையாற்றினார் என்பதைப் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார் கொ.மா.கோதண்டம். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை மட்டுமல்ல, எந்த மொழியைத் திணித்தாலும் அது தவறானதுதான். தமிழின் பெருமை என்று அதை நியாயப்படுத்தக் கூடாது. அதேநேரத்தில், நூலகம் தொடங்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவியை நிராகரிக்கவும் தயாராக இருந்த குமாரசாமிராஜாவின் தமிழ்ப் பற்றும் போற்றத்தக்கது!

- தாமரை செந்தில்குமார், சென்னை.

சிற்றின்பத்தைப் பேரின்பமாக மாற்றும் முயற்சி

ரு ஆறுமுகத் தமிழன் எழுதிய ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்ற கட்டுரை (ஜூலை - 5) படித்தேன். சிற்றின்பத்தை எப்படிப் பேரின்பமாக மாற்றுவதற்கு முயல வேண்டும் என்பதை சட்டைமுனி முன் ஞானம் மற்றும் திருமூலர், திருவந்தியார், தேவாரம், திருமந்திரம் போன்ற சங்க இலக்கியங்களிலிருந்தும், பக்தி இலக்கியங் களிலிருந்தும் உதாரணங்களையும், உவமைகளையும் வெகு அழகாக நிறுவி விளக்கியுள்ளார். கட்டுரையின் உச்சம் - கடவுளேயானாலும் சிற்றின்பம் தவிர்த்து இருக்க முடியாதென்றும், ஆனால் அவ்வின்பத்தை எப்படிப் பேரின்பமாக மாற்றினார் என்பதும்தான். கங்கையையும் உமையாளையும் சமாளிக்க சிவன் என்ன செய்தார் என்பதையும் , இதனால் இருவருக்குமே அவன் நல்லவன் இல்லையென்றும் வெகு அழகாக நிறுவியுள்ளார்.

- சங்கீத் பாபு, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x