Published : 19 Jun 2018 10:58 AM
Last Updated : 19 Jun 2018 10:58 AM

இப்படிக்கு இவர்கள்: உயிர் காக்கவே உடலுறுப்புகள்.. விற்பனைக்கல்ல!

கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.

உயிர் காக்கவே

உடலுறுப்புகள்.. விற்பனைக்கல்ல!

டல் உறுப்பு தானத்துக்கு வழிகாட்டியாக விளங்கிய தமிழகம் இன்று இப்படியாகிவிட்டதே என்று வருத்தப்படும் நிலைக்குத் தள்ளிவிட்டது, ‘மனித உறுப்பு மார்க்கெட் ஆகிறதா தமிழகம்? ஆள் பிடிக்க அலையும் மாஃபியாக்கள்’(ஜூன்-17) கட்டுரை படித்தபோது. ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பிறகுதான், உடல் உறுப்பு தானம் பற்றிப் பரவலாகப் பேச்சு எழுந்தது. அற உணர்வு, மருத்துவத்தில் மட்டுமல்ல; அனைத்திலும் தோற்றுவிட்டதாகவே தெரிகிறது, உடலுறுப்பை விற்பதற்கும் வாங்கு வதற்கும் ஒரு கூட்டம் அலைந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது. குழந்தை கடத்தல், ஆள் கடத்தல் எனத் தினமும் வெளியாகும் செய்திகள் நம்மை நிம்மதியிழக்கவே செய்கின்றன. இளைய தலைமுறையினரிடம் நற்பண்புகளையும், நற்சிந்தனைகளையும் வளர்ப்பதற்கு உடல் உறுப்பு தானம் பற்றி ‘முடிவில் ஒரு தொடக்கம்’ என்ற துணைப்பாடம் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது. உடல் உறுப்புகள் விற்பதற்கு அல்ல; அது உயிர் காக்கும் உறுப்பு தானம் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.

எஸ்.பாபுஜி, கரூர்.

பெருமையைக் கொண்டாடும் எழுத்துகள்

வை

ரமுத்து எழுதிய ‘ஜெயகாந்தன்: கலகக் கலைஞன்!’ என்கிற கட்டுரையின் ஒவ்வொரு வாக்கியமும் ஜெயகாந்தனின் பெருமையைக் கொண்டாடுகிறது(ஜூன் 14). ஜெயகாந்தன் நிகழ்த்திய அதிரடியான மாற்றங்களை அவருடைய பல்வேறு சிறுகதைகளின் மைய இழையிலிருந்து எடுத்தாண்டு எழுத்தில் படம்பிடிக்கிறார் கவிஞர். பாசாங்குகளைக் களைந்த பயமற்ற அவரது ஆளுமையை எழுத வைரமுத்துவால் மட்டுமே இயலும். கட்டுரையைப் படித்து முடித்த பிறகும் அது ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் தொடர்கின்றன.

பொன்.குமார், சேலம்.

பணி தொடர வாழ்த்துகள்

ன்று ஊடகங்கள் அதிகரித்துவிட்டன. அன்று வானொலி ஒன்றுதான் மக்களுக் கான ஊடகம். தேர்தல் முடிவுகள், கிரிக்கெட் ரன் தொடர்பான விவரங்கள் அனைத்தும் அதன் மூலமே தெரியவந்தன. அண்ணா மறைவின்போதும் காமராசர் மறைவின்போதும் வானொலியின் பங்கு மறக்க முடியாதது. சென்னை வானொலிக்கு வயது 80 ஆனதை ஒட்டி குமரி எஸ்.நீலகண்டன் எழுதிய கட்டுரை பழைய நினைவுகளை நினைவூட்டின. சுனாமிப் பேரலையின்போது சென்னை வானொலியின் பணி மகத்தானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதன் பணி தொடர வாழ்த்துகள்.

நா.மணி, ஈரோடு.

இது இறையன்புவின் காலம்

றையன்பு ஐஏஎஸ்ஸின் நேர்காணல், தொழில் தொடங்குவதற்கான உந்து சக்தியை உருவாக்குவதாக அமைந்துள்ளது. இறையன்பு இந்தத் துறைக்கு வந்தபிறகேனும் சாதாரண மக்களுக்கு இத்துறை பற்றித் தெரியவந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி. எதிர்காலத்தில் கோடிட்டுக் காட்டத்தக்க அளவிலான தொழில் முனைவோர்கள் இவர் காலத்தில் உருவாவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கே.ராமநாதன், மதுரை.

பெருமைகொள்ள வைக்கும் அறிவிப்பு!

துரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளன்று முதியோர்களைப் பராமரிக்கத் தவறுவோர்க்கு 3 மாத சிறைத் தண்டனை என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அநாதரவாக, தம் குறைகளைச் சொல்லி ஆதங்கத்தை வெளிப்படுத்தக்கூட இயலாது கைவிடப்பட்ட முதியோர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. இதனை உணர்ந்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசியது, நம்மைப் பெருமைகொள்ள வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x