Published : 11 Jun 2018 09:27 AM
Last Updated : 11 Jun 2018 09:27 AM

இப்படிக்கு இவர்கள்: பிளாஸ்டிக் இல்லா உலகுக்குப் பாதை அமைப்போம்!

வே.படவேட்டான்,

சென்னை.

பிளாஸ்டிக்

இல்லா உலகுக்குப்

பாதை அமைப்போம்!

ஜூ

ன் 7 அன்று வெளியான ‘பிளாஸ்டிக் பொருட்களுக் குத் தடை : பாராட்டுக்குரிய நடவடிக்கை’ தலையங்கம் படித்தேன். தமிழக அரசின் இந்நடைமுறை, உலக அளவிலான சுகாதாரச் சீர்கேடுகளுக்கான சீர்திருத்த அமைப்பு களுக்கேகூட ஒரு முன்னுதாரண செயல்பாடாக அமையலாம். ஒரு சில நிமிடங் களுக்கு மட்டுமே நமக்குப் பயன்தரும் பிளாஸ்டிக், நம் ஆயுளுக்குமான சீரழிவை உண்டாக்கிப் பெருந்தீமையை ஏற்படுத்திவிடுகிறது. பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் மட்டுமல்ல.. அதைத் தயாரிக்கும்போது ஏற்படும் நச்சுக்கழிவு களாலும் பெரும்பாலோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது. அதனால், பிளாஸ்டிக்கைத் தவிர்த்து துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்துவோம். என்னதான் அரசாங்கம் திட்டங்களைத் தீட்டினாலும், அதைச் செயல் படுத்த வேண்டிய பொறுப்பு நம்மிடமும் பெரிய அளவில் இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பையைத் தவிர்த்து, கடைகளுக்குச் செல்லும்போது, வீட்டிலிருந்தே துணிப்பையைக் கொண்டுசெல்லும் கலாச்சாரத்தை உருவாக்குவோம். பிளாஸ்டிக் இல்லா உலகுக்குப் பாதை அமைப்போம்!

வீ.ரத்னமாலா, வீ.யமுனா ராணி, சென்னை.

தமிழ் இந்துவால் ஒரு விடியல்!

‘ஆ

று ஆண்டு காலத் தாமதம்; ஒதுக்கீடுதாரர்கள் பாதிப்பு’ என்ற செய்தி வெளியிட்டவுடன், இத்தனை வருடங்களாகக் கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள், இப்போது நஷ்டஈடு கொடுப்பததாக அறிவித்திருக்கிறார்கள். எங்கள் கஷ்டத்தைப் புரிந்து, எங்கள் விடியலுக்காகத் தாங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சோழிங்கநல்லூரில் வீடு ஒதுக்கீடு பெற்ற நான், தமிழ் இந்துவுக்கு மிகப் பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை நாள் போராடிய எங்களுக்கு இன்று இந்துவால் ஒரு விடியல் கிடைத்திருக்கிறது!

சுந்தர். அழகேசன், திருச்சுழி.

துணிப்பைக்குத் திரும்புவோம்

ருங்காலத் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான உலகத்தை விட்டுச் செல்ல வேண்டியது நம் கடமை. எங்கள் ஊரில் உள்ள ‘குரு ஜெனரல் மெர்ச்சண்ட்’ என்ற கடையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, துணிப்பையில் தருகிறார்கள். முன்னுதாரணர்களை வரவேற்போம்!

சத்திவேல், கோபிசெட்டிபாளையம்.

மக்கள் இயக்கச் சொல்!

ஸ்.என்.நாகராசனின் ‘நான் கம்யூனிஸ்ட் ஆகவில்லை. எனக்குள் இருந்த கம்யூனிஸ்டைக் கண்டுகொண்டேன்’ எனும் கூற்று மிக முக்கியமானது. கீழை மார்க்சியத்தின் அடிப்படையே அதுதான். மேலை மார்க்சியம் ஒரு மனிதனைக் கம்யூனிஸ்ட் எனும் குழுவில் ஒருவனாக்கிப் போராடத் தூண்டுகிறது. கீழை மார்க்சியமோ அவனுக்குள் இருக்கும் கம்யூனிஸ்டைக் கண்டுகொண்டு அவனைத் தனிமனிதனாகவே செயல்படப் பணிக்கிறது. கம்யூனிஸ்ட் எனும் பதத்தை ‘அரசியல் இயக்கச் சொல்’லாகப் புரிந்துகொள்ளக் கூடாது. ‘மக்கள் சமூகச் சொல்’லாகவே பார்க்க வேண்டும். மார்க்ஸ் எனும்போது எப்படி மார்க்ஸைக் குறிப்பிடாமல் அவரின் தத்துவத்தைக் குறிப்பிடுகிறதோ.. அதைப் போன்று ஆழ்வார்கள் எனும்போதும் அவர்கள் சார்ந்திருந்த சமயத்தின் மூல தத்துவத்தையே குறிக்கிறது. மார்க்ஸ் புறத்தையும் குழுவையும் முன்வைத்து சமூக மேம்பாட்டை யோசித்திருக்க.. சமய தத்துவங்கள் அகத்தையும் தனிமனிதனையும் கவனத்தில்கொண்டு, அதே சமூக மேம்பாட்டை வலியுறுத்தியிருக்கின்றன. இதில் கொடுமை என்னவென்றால், தத்துவங்கள் சரியாகத்தான் இருக்கின்றன. அவை அமைப்புகளாக நிறுவனமயப்படுத்தப் படும்போதுதான் சிக்கல்கள் எழுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x