Published : 20 Jun 2018 09:00 AM
Last Updated : 20 Jun 2018 09:00 AM
வே.படவட்டான், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சென்னை.
மின்னூல் அல்ல...
புத்தக வாசிப்பே நிரந்தரம்!
க
ண்ணன் எழுதிய ‘அச்சு நூல்கள் அழியாது..! ஏன்?’ (ஜூன் 15) கட்டுரையை வாசித்தேன். கட்டுரை சொல்லும் செய்தி நூற்றுக்கு நூறு சதவீதம் சரியானது. மின்னூல் வாசிப்பில் நமக்குச் சாதக மான அம்சங்கள் ஏராளமாக இருந்தாலும், அதைவிட அதிகமாகவே பாதகமான பின்விளைவுகளும் இருக்கின்றன. மிக முக்கியமாக, கட்டுரையாளர் குறிப்பிட்டதுபோல ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி புத்தகம் வாங்கிய பிறகு, ஏதோ காரணத்தால் அப்புத்தகம் பயன்பாட்டில் இல்லாமல் போகும்போது, பணம் கொடுத்து வாங்கிய நம் நிலை என்ன? புத்தகமும் இல்லாமல், பணமும் திரும்பக் கிடைக்காமல் திரிசங்கு நிலையா? இதைவிட உடல்நலம் சார்ந்து மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் சூழல் உருவாகும். நம் அதீத பயன்பாடுகளாக டி.வி., லேப்டாப், கணினி, செல்போன் என்று எண்ணற்ற வழிகளில் தினமும் ஒளிர்திரை மூலமாகவே ஒவ்வொரு நாளின் பெரும்பகுதி நேரங்கள் கழிகின்றன. இதனுடன் வாசிப்பும் கிண்டில் வழி எனும்போது, சொல்லத்தேவையில்லை.. வியாதிகளின் வரவுக்கு. மருத்துவ உலகமும் நீண்ட நேரம் டி.வி. பார்க்காதீர்கள்.. செல்போனில் வெளிச்சத்தைக் குறைத்துப் பயன்படுத்துங்கள்.. கணினித் திரையை 20 நிமிடங்களுக்குத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் இரண்டு நிமிடங்களுக்கு கண்களுக்கு ஓய்வுகொடுங்கள் என்று சொல்வதுபோலவே, மின்னூல் வழி வாசிப்புக்கும் பயம் கலந்த அறிவுரை சொல்லும். இவ்வாழ்வனுபவங்களின் வழிசென்று, அல்லல்பட்டுத் தேறி.. ஆய்ந்து, புத்தக வாசிப்பு நோக்கி முழுமையாகத் திரும்புவோம். என்ன.. காலம் கொஞ்சம் தேவைப்படும் அவ்வளவுதான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT