Published : 26 Jun 2018 09:18 AM
Last Updated : 26 Jun 2018 09:18 AM

இப்படிக்கு இவர்கள்: சமயம் கடந்த சகோதரத்துவம் தமிழின் பெருமிதம்!

சமயம் கடந்த சகோதரத்துவம் தமிழின் பெருமிதம்!

ஜூ

ன் - 21 அன்று ‘ராவுத்த குமாரசாமி: தமிழ் சகோதரத்துவத்தின் இன்னொரு அடையாளம்’ என்கிற கோம்பை எஸ் அன்வர் எழுதிய கட்டுரையைப் படித்தேன். பன் முகத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாடு களுக்கு இப்படிப்பட்ட அடையாளங்களை ஆவணப்படுத்தல் அவசியமான ஒன்று. இன்றைய காலகட்டம் மிகவும் சிக்கலானது. சமயத்தின்பால் தீவிரப் பற்றும், அதுவே காலப்போக்கில் மாற்றுச் சமயத்தினரை வன்மத்தோடு பார்க்கும் கலாச்சாரமாகவும் மாறிவருகிறது. இந்தப் போக்கு பேராபத்துக்கு வழிவகுக்கும். முதலில் அமைதியற்ற சூழல் நிலவி, மோதல்களும் சண்டைச் சச்சரவுகளும் நிகழ்கின்றன. நாட்டார் தெய்வ வழிபாடுகள் இனம், சமயம், மொழி உள்ளிட்ட பிரிவினை அடையாளங்கள் கடந்தவை. இந்த விழாக்களில் அனைத்துப் பிரிவினரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்யும் அருமையான சூழல் நிலவுகிறது. இதுபோன்ற அடையாளங்கள் வேறெந்தப் பகுதியைக் காட்டி லும் தமிழ் நிலப்பரப்பில் ஏராளமாக உள்ளன. அதுவே தமிழகத்தின் அடையாளம்.

- பேராசிரியர் செ.சேவியர், வரலாற்றுத் துறை,

பெரியார் ஈ.வெ.ரா. தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

வயல்களை அழித்துவிட்டு

பசுமை எங்கிருந்து வரும்?

‘ப

சுமைவழிச் சாலையால் யாருக்குப் பலன்?’என்னும் கட்டுரை படித்தேன். இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள். கிராமங்களின் ஆன்மா வேளாண்மை. ஆனால், வேளாண்மையோடு பின்னிப் பிணைந்த ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள், வயல்களை அழித்துவிட்டுப் பசுமையை எங்கிருந்து கொண்டுவர முடியும்?

- சேகரன், பெரணமல்லூர்.

மீண்டும் திரும்புவோம்

இயற்கை வேளாண்மைக்கு!

ஜூ

ன் - 25 அன்று வெளியான ‘செலவில்லாத இயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டும் ஆந்திரம்’ கட்டுரை படித்தேன். ‘இயற்கை விவசாயம் செய்வது எப்படி என்பதைப் பற்றி விவசாயிகளிடம் கேட்க வேண்டும்; விஞ்ஞானிகளிடம் கேட்காதீர்கள்’ என்ற கருத்து மிகவும் ஆழமானது. எந்த ஒரு செயலையும் மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அவற்றின் உண்மைத்தன்மை தெரியவரும். ஆந்திர பிரதேசம் முழுவதும் 2024-க்குள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவார்கள் என்ற கருத்து வரவேற்கத்தக்கது மட்டுமல்ல; பின்பற்றத் தக்கதும்கூட!

- கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி

விஜய் புகைபிடிக்கக் கூடாது!

பா

ட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், நடிகர் விஜய்யை சினிமாவில் புகைபிடிக்கும் காட்சி யைத் தவிர்க்கச் சொல்வது மிகவும் தேவையான ஒன்று. பதின்ம வயதினர் பலர் திரைப்படக் கதாநாயகர்களால் கவரப்பட்டே இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் கண்டறிந்த உண்மை. மக்களின் சுகாதாரத்தைப் பல விதங்களில் சீரழிக்கும் இந்தக் கொடிய பழக்கத்தை ஒழிக்கும் சமூகப் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

- இரா.பொன்னரசி, வேலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x