Published : 29 May 2018 07:11 AM
Last Updated : 29 May 2018 07:11 AM

இப்படிக்கு இவர்கள்: காலம் எழுதிய புதிர் பிரமிள்

சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

காலம் எழுதிய புதிர் பிரமிள்

ழுத்தாளர்கள் ஓவியர்களாக இருத்தல் அபூர்வம். மகாகவி தாகூர்போல பிரமிள் நுட்பமாக வரையும் ஆற்றல் பெற்றவராக இருந்தார். இந்திய நுண்கலை மரபு அறிந்த படைப்பாளராக பிரமிள் திகழ்ந்தார். அவர் வரைந்த கோட்டோவியங்கள்போல அவர் எழுதிய கவிதைகள் செறிவானவை. வரிகளுக்கிடையே மறைந்து கிடக்கும் மௌனம் பிரமிள் கவிதைகளைப் படிமக் கவிதைகளாக்குகின்றன. ‘சிறகிலிருந்து பிரிந்த/ இறகு ஒன்று/ காற்றின்/ தீராத பக்கங்களில்/ ஒரு பறவையின் வாழ்வை/ எழுதிச்செல்கிறது’ எனும் பிரமிள் கவிதை இளம் எழுத்தாளர்களுக்கு மாதிரிக் கவிதை. அவர் கவிதைகளைப் போல் கட்டுரைகளும் ஆழமானவை.

அவர் படைப்பு மனத்தை அறிந்துகொள்ள அவரது கட்டுரைத் தொகுப்பான ‘வெயிலும் நிழலும்’ உதவும். சி.சு.செல்லப்பா படைப்புகள் குறித்த பிரமிள் விமர்சனங்கள் கூர்மையானவை. மௌனியும் புதுமைப்பித்தனும் அவருக்குள் கிளர்ச்சியை உருவாக்கிய எழுத்தாளர்கள். இந்திய தத்துவ மரபைச் சரியாகப் புரிந்துகொண்டே மற்றவர்களுக்கும் சரியாகச் சொன்னவர் பிரமிள். ஜே.கிருஷ்ணமூர்த்தி மீது ஈடுபாடு கொண்டவர் பிரமிள். அவர் ஜே.கே.யின் ‘பாதையில்லாப் பயணம்’ நூலைத் தமிழுக்குத் தந்தார். பிரமிளின் மொழிபெயர்ப்புப் பணிகளும் குறிப்பிடத்தக்கன. ‘மார்க்ஸும் மார்க்சியமும்’, ‘சூரியன் தகித்த நிறம்’, ‘சாத்தானுக்குப் பிரார்த்தனை விண்ணப்பங்கள்’ ஆகியவை குறிப்பிடத்தக்கன. பிரமிள் எழுத்துகளை லயம் இதழ்த் தொகுப்பின் மூலமாகவும் கால.சுப்பிரமணியனின் தொகுப்புகள் மூலமாகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். மொத்தத்தில் பிரமிள் ஒரு புரியாத புதிர்தான் அவர் கவிதைகளைப் போல!

சு.தட்சிணாமூர்த்தி, பி.என்.புதூர்.

சிறந்த வழி!

மே

ல்நிலை தொழிற்கல்விப் பிரிவில் கணினி அறிவியலை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. பொறியியல் கலந்தாய்வில் தொழிற்கல்விப் பிரிவுக்கு 10% இடஒதுக்கீடு இருக்கிறது. அதுவும் முதல் நாளன்றே கலந்தாய்வு பெறுகின்ற வாய்ப்பு இந்த தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு அமைகின்றது. ஆறாம் வகுப்பு முதலே தொழிற்கல்வி பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்துவது அவசியம். தொழில் கல்வியிலும் மாணவர்கள் ஊக்கத்துடனும், மேல்படிப்புக்கான வாய்ப்புகளுடனும் பயில இது ஒரு சிறந்த வழியாகும்.

ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

இது தொடர வேண்டாம்

மயபுரம் கோயில் யானை மிரண்டு அதன் பாகனை ஆக்ரோஷத்துடன் மிதித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியூட்டுகிறது. இதுபோன்ற உயிர் பலிகளும் காயங்களும் ஏற்கெனவே பலமுறை கோயில் யானைகளால் ஏற்படுத்தப்பட்டும், வன விலங்கை வனச் சூழலிலிருந்து பிரித்து, மனிதர்கள் நடமாடும் ஆலயத்தில் வைத்திருப்பது தொடர வேண்டுமா? இது மாதிரி சர்க்கஸில் வைத்திருந்த யானைகளை விடுவித்து, காட்டில் விடப்பட்டது. சர்க்கஸுக்குப் பொருந்தும் தர்க்கம் கோயிலுக்கு ஏன் பொருந்தவில்லை?

சு.செந்தில்ராஜன், செம்போடை.

நோய் விரட்டும் வழிகள்

மே

25 அன்று வெளியான ‘நிபா எனும் புதிய அச்சுறுத்தல்’ கட்டுரை, விழிப்புணர்வு ஊட்டும் விதமாக இருந்தது. புதிய தொற்றுநோய்கள் தாக்கும்போது, போதிய விழிப்புணர்வின்றி அச்சம்கொள்கிறார்கள். மருத்துவர் அறிவுறுத்தியபடி, கைகளை சோப்பு கொண்டு கழுவுதல், உப்பு நீரில் வாய் கொப்புளித்தல், பழங்களைச் சுத்தமாகக் கழுவிச் சாப்பிடுவது போன்ற நடைமுறைகளைக் கடைபிடித்தால் தொற்றுநோயை விரட்டிவிடலா‌ம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x