Published : 16 May 2018 08:54 AM
Last Updated : 16 May 2018 08:54 AM
ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
அன்பைப் பெற்றுத் தர இயலுமா?
நகைப்புக்குரியது ‘பெற்றோரைப் புறக்கணித்தால் தண்டனைக்கு உட்படுத்த சட்டம் கொண்டுவரப்படும்’ என்ற அறிவிப்பு. கட்டாயப் படுத்தி அன்பு செலுத்த வைக்க முடியாது. மேலும், மகன் சிறைக்கு அனுப்பப்பட்டால் அவரது குடும்பமும் பாதிக்கப் படும். மகள் மட்டுமே இருந்தால் பெற்றோரைப் பேணும் செலவை யார் ஏற்பர்?
நான் கனடா சென்றிருந்தபோது, ஒரு பாலத்தில் முதிய தம்பதியர் உட்கார்ந்திருந்தனர். என்னை நிறுத்தி, ‘இந்தியாவில் பெற்றோர் மகனோடுதான் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். உங்கள் பெற்றோர் உங்களுடன்தான் உள்ளனரா?’ என்று கேட்டார்கள். ‘இல்லை, அவர்கள் இருவரும் காலமாகிவிட்டனர்’ என்றேன். ‘கடைசிக் காலத்தை உங்களுடன் கழித்தனரா?’ என்று கேட்டார்கள். ‘இல்லை, என்னுடைய அண்ணன் வீட்டில் இருந்தார்கள். என் பணியிடம் வெகு தொலைவில் இருந்தது. ஆனாலும் மாதம் ஒரு முறையாவது அவர்களைப் பார்க்கப் போவேன்’ என்று சொன்னேன். ‘அவர்கள் பாக்கியசாலிகள். மகனோடு இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்கள். நீங்களும் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர். நாங்கள் முதியோர் இல்லத்தில் இருக்கிறோம். எங்களைப் பார்க்க எங்கள் மகன்களோ, மகள்களோ வருவதில்லை. எங்கள் பேரக் குழந்தைகளைப் பார்க்க நிரம்ப ஆசைப்படு கிறோம். அவர்கள் முகம்கூட எங்களுக்குத் தெரியாது. படுக்கை, உணவு அல்ல, அன்பைத்தான் நாங்கள் வேண்டு கிறோம். அது கிடைக்கவில்லையே’ என்று அவ்விரு முதியவரும் வருந்தியதை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. இந்திய அரசு கொண்டுவரும் சட்டம் பெற்றோர்க்கு இருப் பிடம், உணவு ஆகியவற்றை உறுதிப்படுத்தலாம்; அன்பைப் பெற்றுத் தர இயலுமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
இது மக்களுக்கான அரசாக
எப்படி இருக்க முடியும்?
மே
-14ல் வெளியான ‘நுழைவுத் தேர்வு அநீதி களுக்கு முடிவுகட்டுங்கள்!’ என்கிற தலையங் கம் படித்தேன். நுழைவுத் தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியதோடு, பிராந்திய மொழிகளில் மாணவர்கள் குறைவாகத் தேர்வு எழுதுவதால், அதை நிறுத்த முயற்சிசெய்வதாகச் செய்திகள் வருவதைக் குறிப்பிட்டு, தக்க நேரத்தில் எச்சரிக்கை செய்துள்ளீர்கள்.
உண்மையிலேயே கல்வியின் தரத்தை உயர்த்த நினைக்கும் அரசாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தாய்மொழியில் குறைவாக எழுதும் மாணவர்களை ஊக்குவித்து, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து, அவர்களின் எண்ணிக்கையை அல்லவா அதிகரித்திருக்க வேண்டும்? அந்தந்த மாநில மொழியில் மருத்துவர் கள் வந்தால்தானே அவர்களது மாநில மொழி பேசும் மக்களுக்காகப் பணிபுரிய முடியும். அதைவிடுத்து, நீ உன் தாய்மொழியை விட்டுவிட்டு வேறு மொழியில் எழுது என்று சொல்லும் அரசாங்கம் எப்படி மக்களுக்கானதாக இருக்க முடியும்?
ஜப்பானில், ரயிலை நிறுத்த நினைத்த அந்நாட்டு அரசு, ஒரே ஒரு மாணவி மட்டும் பள்ளிக்குச் செல்வதற்காக அந்த ரயிலில் பயணிப்பதால், அம்மாணவியின் படிப்பு முடியும் வரை அந்த ரயிலை இயக்கியதாக ஊடகங்களில் வரும் செய்தி, அந்நாடு கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைப் புரியவைக்கிறது. ஆனால், நம் நாட்டின் கல்வி நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதுபோன்ற மோசமான முடிவுகளை அரசியல்வாதிகள் மேற்கொள்ள நினைத்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதிலுள்ள குறைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அவர்களுக்கு விளக்கி, அம்முடிவுகளைத் தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT