Published : 27 Aug 2014 01:15 PM
Last Updated : 27 Aug 2014 01:15 PM
சென்னைத் தமிழ் பற்றிய கட்டுரை அருமை. நான் வேலூரில் வசிக்கிறேன். எங்கள் மொழியும் இதேதான். நான் என் கல்விக்காக வேறு மாவட்டங்களில் இருந்தபோது இன்னா, ஆமாவா, துன்றது, இட்னு வா, எட்த்தா போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே பரவசமடைந்துள்ளேன்.
நான் ஜெயகாந்தனின் எழுத்துக்களை ரசிப்பதற்குக் காரணமே சென்னைத் தமிழ்தான். இதுபற்றிய ஏளனத்தை உருவாக்கியதே பல எழுத்தாளர்களும் பிரபலங்களும்தான்.
உண்மையில், இவர்கள்தான் தமிழை ‘தமில்’ என்பது. எல்லா வட்டார மொழிகளும் அந்தந்தப் பகுதி மக்களின் பண்பாடே. எளிய மக்கள் பேசுவதால் இதனைக் குறைத்து மதிப்பிடுவது ஒரு குறியீடாகிவிட்டது. யார் என்ன சொன்னாலும் ‘வாங்கினு வா’ என்பது என்னைப் போன்றவர்களின் செவிகளில் இன்பத் தேனையே பாய்ச்சும்.
- மோனிகா மாறன், வேலூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT