Published : 24 May 2018 09:32 AM
Last Updated : 24 May 2018 09:32 AM
சு.தட்சிணாமூர்த்தி,
பி.என்.புதூர்.
கண்டுகொள்ளுமா
மத்திய அரசு?
க
ச்சா எண்ணெய் விலை உலகெங்கும் சரிவைச் சந்தித்த காலங்களில், அதன் பயனை நுகர்வோருக்கு அளிக்காமல் பெரும் லாபம் ஈட்டின பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள். தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் சூழலில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கும். அதுமட்டுமல்லாமல், போக்குவரத்தி லிருந்து காய்கறி வரை அனைத்தும் விலை உயரும். இதைக் கருத்தில்கொண்டு, பல முறை உயர்த்தப்பட்ட சுங்க வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.
இரா.பொன்னரசி, வேலூர்.
நிகழக் கூடாத கொடுமை!
தூ
த்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 99 நாட்கள் அமைதியாகப் போராடிய மக்களுக்கு 100-வது நாள் மட்டும் வன்முறை கைவருமா? இந்த வன்முறை அரசின் அலட்சியம்.. மக்கள் மீது ஏவிய வன்முறை. சூழல், இவையனைத்தையும் மீறி, மோசமான வகையில் நடந்திருக்கும் உயிர் பலிகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. மக்களுடன் பேசியிருந்தால், இத்தகைய போராட்டங்களால் ஏற்படக்கூடிய விபரீதங்களை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கையுடன் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தால், உயிர் பலிகளைத் தவிர்த்திருக்கலாம். பள்ளி மாணவியைக்கூட பலி வாங்கிய கோரமான நிகழ்வு இனி எங்குமே நிகழக் கூடாது!
எஸ்.பரமசிவம், மதுரை.
அந்த நாள் ஞாபகம் வந்ததே...
வெ
.இறையன்பு எழுதிய ‘காற்றில் கரையாத நினைவுகள்’ (மே 22) என்கிற கட்டுரை வாசித்தேன். பசுமை நிறைந்த மரங்களும், வாழை, நெல் விளையும் என் கிராமத்தில் வாழ்ந்த இளமைக் காலங்களை மலரும் நினைவு களாகப் படம்பிடித்துக் காட்டுவதுபோலவே இருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்களின் அன்பும், அரவணைப்பும், உதவும் மனப்பான்மையும் மறக்க முடியாத நிகழ்வு. சாதி, மதம் கடந்து அண்ணன் - தம்பி என்ற உணர்வோடு வாழ்ந்த வாழ்க்கை செம்மையானவை என்பதை உணர்த்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT