Published : 21 May 2018 08:43 AM
Last Updated : 21 May 2018 08:43 AM

இப்படிக்கு இவர்கள்: போராட விடுங்கள் ரஜினி!

கே.கே தாஸ்,

நீலனூர்.

போராட

விடுங்கள்

ரஜினி!

மே

18 அன்று வெளி யான ‘ரஜினி அரசியலின் பேராபத்து’ என்கிற கட்டுரை படித்தேன். மிகச் சரியான நேரத்தில் எழுதப்பட்டுள்ளது. கட்டுரையில், வாய்ப்பூட்டு பேச்சு பற்றியும், தனி மனிதனை சமுதாயத்தைக் காக்கும் நோக்கிலிருந்து ‘உன் குடும்பத்தைக் கவனி’ என்று திசைதிருப்பும் உத்தி; பொதுப் பிரச்சினையில் அக்கறையுள்ள பெருங்கூட்டம், சிறு சிறு கும்பலாக ஆங்காங்கே தன்னெழுச்சிப் போராட்டக் களத் தில் பெண்களின் பெரும் பங்கேற்பு: இவை எல்லாம் அரசுகளின் ஆகப் பெரிய அதிகாரத்துக்கு எதிராக, சாமானியனின் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ள சூழல்.. ஜீவாதாரப் பிரச்சினைக்காக நீதிமன்றத் தின் முன் ஜனநாயகத்தைக் காக்கப் போராடும் இளைஞர் கள் - இவையனைத்தும் அரசியல் பிம்பத்தின் எதிர்க் காரணிகளாக ரஜினி நம்புவது போல் தெரிகிறது.

ராஜேஷ் தங்கராஜ், மின்னஞ்சல் வழியாக…

ரஜினி பற்றிய கட்டுரை பேத்தல்!

மஸ் எழுதிய ‘ரஜினி அரசியலின் பேராபத்து’ (மே 18 அன்று) கட்டுரை சுத்த பேத்தல். ரஜினி விமர்சகர்களுக்கு வேண்டுமானால் இந்தக் கட்டுரை குதூகலம் தரலாம். ரஜினி ரசிகர்களோ, பொதுவான வாசகர்களோ இதுபோன்ற கட்டுரைகளைச் சிறிதும் பொருட்படுத்த மாட்டார்கள்.

ப.பா.ரமணி, கவுண்டம்பாளையம்.

பாலஸ்தீனத்துக்கு இந்தியா உதவ வேண்டும்

டந்த ஐம்பது ஆண்டுகளாத் தொடரும் பாலஸ்தீன மக்களின் துயரம் குறித்த ‘காசா படுகொலைகள்: சர்வதேச சமூகத்தின் மவுனம் கலையட்டும்’தலையங்கம், அங்குள்ள சூழலை மிகச் சரியாகப் பதிவுசெய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து, பாலஸ்தீனச் சிக்கலை மேலும் சிக்கலாக்கியுள்ளார். மே 14-ல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தியுள்ள ராக்கெட் தாக்குதல்கள், அப்பாவி மக்களைக் கொன்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவூட்டுகிறது. 1967-ல் அநீதியாகக் கைப்பற்றப்பட்ட காசா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேறிட, ஐநா சபை இயற்றியுள்ள தீர்மானங்களை அந்நாடு மதிக்காமல் அலட்சியப்படுத்திவருவதை உலக நாடுகள் இனியும் பொறுத்துக்கொள்ளக் கூடாது. பாலஸ்தீன அரசின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் அறிவிக்கப்பபட வலுவான குரல் ஐநா சபையில் ஒலிக்க.. இந்தியா தனது பாரம்பரிய நிலையில் நின்று பங்காற்றிட வேண்டும்.

இரா.முத்துக்குமரன், குருங்குளம் மேல்பாதி .

மோடியிடம் கற்றுக்கொள்ளுங்கள்..

ர்நாடக மாநிலத்தில் வீசிய பிரதமர் நரேந்திர மோடி புயல் பற்றிய கட்டுரை வாசித்தேன். ஒரு கட்சியை எப்படி வெற்றிபெற வைக்க வேண்டும்.. களப்பணி என்பது எப்படி அமைய வேண்டும் என்பதை இன்றைய இளம் அரசியல்வாதிகள் மோடியிடமும் அமித் ஷா விடமும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி பேசாத மாநிலத்தில் தங்கள் உத்தியை எப்படிக் கையாள வேண்டும் என்பதை அருமையாகச் செயல்படுத்தியிருக்கிறார்கள். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சி என்பது மழைத் துளிகளின் பெருக் கம் போன்ற வெள்ளம் அல்ல; அது பெரு மழையாக உருவாகி புயலாக மாறினால்தான் கரை சேர முடியும் என்று உணர்ந்து காய் நகர்த்திய பாஜகவின் பாங்கு எதிர்க் கட்சிகள் இனி சரி யான வியூகங்களை வகுக்கப் பாதைகளைத் திறந்துவிட்டதாகத்தான் உணர முடிகிறது. இது ஏதோ கர்நாடகத் தேர்தல் மட்டுமே என்று நாம் ஒதுங்கிப் போக முடியாது. நாளை தமிழகத் தில்கூட அமித் ஷாவின் வியூகம் செல்லுபடியாகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x