Published : 17 Apr 2018 09:26 AM
Last Updated : 17 Apr 2018 09:26 AM
என்.மணி, ஈரோடு.
ஜீரணிக்க முடியவில்லை
ஏ
ப்ரல் 16 அன்று வெளியான 'மகள்களை எப்படிக் காக்கப்போகிறீர்கள் பிரதமரே' கட்டுரை வாசித்தேன். நம் மகளுக்கு நியாயம் கிடைத்தே தீரும் என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். இதற்கு முன்பும் மாடுகளின் பெயரில் மனிதர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட போதும், 'தலித்துகளை கொல்லாதீர்கள் என்னைக் கொல்லுங்கள்' என்று வீர வசனம் பேசியவர்தான். இதேபோன்று பல்வேறு பிரச்சினைகளில் வெற்று வார்த்தை முழக்கம் செய்பவர்தான். அவருடைய வார்த்தைகளில் உண்மை இருக்கும் எனில், அவரது கட்சிக்காரர்கள். அனுதாபிகள், ஆதரவாளர்கள் தேசியக் கொடியை ஏந்திப் படுபாதகச் செயலுக்கு ஆதரவாக ஊர்வலம் போக மாட்டார்கள்; பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட மாட்டார்கள். இவர் நேசிக்கும் இந்துத்துவ சித்தாந்தம் என்பதே அடிப்படையில் பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரானது என்பதை இந்தச் சம்பவங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. எட்டு வயதுக் குழந்தையைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவது, கொடூரமான முறையில் கொல்வது ஆகிய கொடூரங்களைச் சிறிதும் ஜீரணிக்க முடியவில்லை.
கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.
நிச்சயம் வெல்வோம்
இ
ந்த மண்ணில் கோலோச்சிய நமது பாரம்பரியமான பண்பாட்டுக் கலைகள் பலவும் மறையத் தொடங்கியது நம்முடைய அஜாக்கிரதையே என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். நாட்டுப்புறக் கலைகள் பலவும் நம் பண்பாட்டுடன் தொடர்புடையவை. நாகரீக மோகத்தில் நாடகங்கள், தெருக்கூத்து, பாவைக்கூத்து, காவடியாட்டம், கரகாட்டம், சிலம்பம் என எண்ணற்ற பாரம்பரியங்களை இழந்து சினிமா, தொலைக்காட்சி என வெறுமையாகி இருக்கிறது தமிழினம். இதையெல்லாம் மீட்டெடுக்கும் விதமாக கலைத்திருவிழா எனப் பள்ளிகளில் நடத்தப்படுவது பாராட்டுக்குரியது. கலையும், பண்பாடும் தமிழர்களின் அடையாளங்கள் என்பதை உணர்ந்து இதனை காக்க நாம் அனைவரும் ஒருமித்து செயலாற்றினால் நிச்சயம் வெல்வோம்.
ஜீவன்.பி.கே, கும்பகோணம்.
முன்னுதாரணம்
இ
ந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது என்றாலும் இதனால் ஒரு வயது குழந்தை பாதிக்கப்படும். குழந்தை, காப்பகத்தில் வளர்வதில் சட்டச் சிக்கல் இல்லை. ஆனால், ஒன்றுமறியாக் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு அது சரியல்ல என்று எண்ணிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, 16 வயது சிறுமியிடம் ஒரு வயது குழந்தை ஒப்படைப்பு என்று தீர்ப்பு வழங்கியது. சட்டத்துடன் மனிதாபிமானமும் கலந்தால்தான் சமூகம் பயன்பெறும் என்பதற்கு இத்தீர்ப்பு ஒரு நல்ல முன்னுதாரணம்.
சத்துவாச்சாரி இரா. பொன்னரசி, வேலூர்.
பாராட்டுக்குரிய முயற்சி
இ
ந்தி பிரச்சார சபாவின் வழியில் பிற மொழியினர் தமிழ் கற்கும் வகையில் தமிழக அரசின் தமிழ்த்துறை தமிழ் வகுப்புகள் தொடங்க இருப்பது பாராட்டுக்குரிய முயற்சி. இது தகுந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் நமது தமிழ் மொழியின் கொண்டாட்டத் தளம் விரிவடையும். அரசின் இந்த நல்ல முயற்சி, தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்யும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT