Published : 02 Apr 2018 08:41 AM
Last Updated : 02 Apr 2018 08:41 AM

இப்படிக்கு இவர்கள்: கல்வி என்பது அடிப்படைத் தேவை!

கல்வி என்பது அடிப்படைத் தேவை!

ட்டாயக் கல்விச் சட்டம் நடைமுறைக்கு வந்து ஏப்ரல் 1 உடன் எட்டு ஆண்டுகள் முடியப்போகிறது. ஆனால் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி என்பது அடையப் பெறாததாக உள்ளது. கல்வி உரிமைச் சட்டப் பிரிவு 19(5)-ன்படி அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாமென்றும், தொடர்ந்து இயங்கினால் நாளொன்றுக்கு ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டுமென்றும் கூறுகின்றது. ஆயிரக்கணக்கான பள்ளிகள் அங்கீகாரம் பெறாது செயல்பட்டுவருகின்றன; எவ்வித அபராதமும் விதிக்கப்படவில்லை. கல்வி மறுக்கப்பட்டவர்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். அவர்களுக்கு வாழ்வளிக்கும் கல்வி அடிப்படைத் தேவை. அரசுகளை உறக்கத்திலிருந்து தட்டியெழுப்ப சமூக அமைப்புகள் ஒன்றுதிரள வேண்டும்!

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

இரட்டைவழிப் பாதைகள்

விரைவு பெற வேண்டும்

செ

ன்னை-மதுரை இடையே விழுப்புரம் - திண்டுக்கல்லுக்கு இடையிலான 273 கிலோ மீட்டர் தூர இருப்புப்பாதைப் பணியை முடிக்க 12 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. சென்னையுடன் கன்னியாகுமரியை இணைக்கும் இரட்டை வழித் தடத்தைப் பெறுவதற்குப் பல ஆண்டுகளாகக் காத்திருக்க வேண்டியுள்ளது. மதுரை - தூத்துக்குடி, மதுரை - கன்னியாகுமரி, மதுரை - திருவனந்தபுரம் ஆகியவற்றுக்கு இடையிலும் இரட்டை வழிப் பாதைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். மதுரையிலிருந்து போடிநாயக்கனூருக்கு ஏற்கெனவே இருந்த மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுகிறோம் என்று சொல்லி, அகற்றிவிட்டார்கள். போடிநாயக்கனூரிலிருந்து வெளியூர்களுக்கும் மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, மிளகு போன்ற வாசனைத் திரவியங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து லோயர் கேம்ப் வரையிலும் ஒருவழிப் பாதையாகவாவது ரயில் பாதை அமைத்தால் வசதியாக இருக்கும்.

- அ.ஜெயினுலாப்தீன், சென்னை- 83

மக்கள் போராட்டம் உணர்த்துவது எதை?

மா

ர்ச் 30 அன்று வெளியான ‘ஸ்டெர்லைட்: ஓயாத போராட்டம் ஏன்?’ என்ற கட்டுரை, பிரச்சினையை விவரித்துள்ளது. இந்த ஆலை அமைய குஜராத், கோவா, மகாராஷ்டிரம் என்று பல மாநிலங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலையால் நிலம் மட்டுமல்ல கடலும் மாசுபட வாய்ப்பிருக்கிறது என்று தூத்துக்குடி பகுதி மக்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்குப் பெரிதும் நம்பியிருப்பது கடலைத்தான். இந்நிலையில், தங்கள் எதிர்காலத்துக்காகவும் சந்ததியினரின் எதிர்காலத்துக்காகவும் அவர்கள் போராட வேண்டியிருக்கிறது. இப்பிரச்சினையில் உரிய தீர்வு எட்டப்பட வேண்டும்!

சு.சந்திரகலா, சிவகங்கை.

டால்ஸ்டாயின் மகத்துவம்

.வெண்ணிலா எழுதும் ‘மரணம் ஒரு கலை’ தொடரைத் தவறாமல் படித்துவருகிறேன். டால்ஸ்டாயின் மரணத்தில் தொடங்கி அவரது வாழ்க்கையை, கொள்கை, கோட்பாடுகளை ரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். என் போன்ற வாசகர்களின் மனதில் மறக்கமுடியாத இடத்தில் டால்ஸ்டாயை வைத்துவிட்டார். அவருடைய படைப்புகளையும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டுள்ளார்.

- ம.மீனாட்சிசுந்தரம், சென்னை.

ஊதிய உயர்வா இது?

பொ

துத்துறை நிறுவனமான போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2.44% ஊதிய உயர்வே போதுமானது என்று தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது வருத்தத்தைத் தருகிறது. ஏற்கெனவே இருந்த அடிப்படை ஊதியமே மேற்கண்ட காரணியால் பெருக்கப்பட்டு புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையால் கடைநிலை ஊழியருக்கு சொல்லத்தக்க பலன் ஏதும் இல்லை. மக்களின் ஏச்சையும் பேச்சையும் போக்குவரத்து ஊழியர்கள் வாங்கியதே அதிகம்.

- சு.பாலகணேஷ். மாதவன்குறிச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x