Published : 15 Feb 2018 08:55 AM
Last Updated : 15 Feb 2018 08:55 AM

இப்படிக்கு இவர்கள்: பின்தொடரும் மரண பயம்

பின்தொடரும் மரண பயம்...

ண்ணாரப்பேட்டையில் இரண்டு இளைஞர்கள் ஒரு பெண்ணிடம் கழுத்துச் சங்கிலியைப் பறிக்க முயற்சித்து, அது வராததால் அப்பெண்ணைத் தரதரவென சாலையில் இழுத்துச் சென்ற படம் (பிப்.12) கடுமையான அதிர்ச்சியைத் தந்தது. அந்த நேரத்தில் அந்தப் பெண் எவ்வளவு மரண பயத்தை அனுபவித்திருப்பார்? எனக்கும் 2 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அந்த நேரத்தில் எனக்கு உருவான மரண பயம் இன்னும் போகவில்லை. இன்னும் தனியாகச் செல்ல பயம் உள்ளது. இப்படியான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கடும் தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும்.

-பா.அகிலா, பொன்னவராயன்கோட்டை

சாகுந்தலத்தைத் தமிழில் தந்தார்

றைமலையடிகளைப் பற்றிய கவிஞர் வைரமுத்துவின் கட்டுரை(பிப்.14), அடிகளாரின் பன்முகத்தன்மையில் தனித்தமிழுக்கு ஆற்றிய சீரிய பணியை மையப்படுத்தியுள்ளது. நான் கோவை அரசுக் கல்லூரியில் படிக்கும்பொழுது ஈரோடு தமிழன்பனின் அண்ணன் தங்கவேலு முயன்று, அடிகளாரை மாணவரிடம் உரையாட ஏற்பாடு செய்தார். கல்லூரி முதல்வருக்கு அதில் விருப்பமில்லை. மன்ற நிதியினின்று கொடுக்க முடியாது என்றார். மாணவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து அடிகளாரை வரவழைத்தனர். இரவு ஏழு மணிக்கு வந்து ஒரு மணி நேரம் அவர் உரையாற்றியதை மறக்க இயலாது. அவர் பன்மொழி வித்தகர். காளிதாசரின் சாகுந்தலத்தைத் தமிழில் தந்துள்ளார்.

-ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

ஒவ்வொருவருக்கும்

கவனம் வேண்டும்

மு

ழுமையாகப் புழங்காத பாண்டம்தான் பாசி சேர்க்கும். கனன்று எரியாத நேரத்தில்தான் சாம்பல் பூக்கும். அன்னைத் தமிழுக்கு அந்நிலை எந்நாளும் வராமலிருக்க தமிழர்கள் ஒவ்வொருவரும்தான் கவனம் காக்க வேண்டும் என்பதை, மறைமலை அடிகளாரின் தொண்டைச் சொல்லியே திறம்படப் புரியவைத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து.

- செந்தில்வேலவன், சென்னை 17.

வெற்றிக்கு முதல் படி

தே

சிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் தனது கன்னி சுகாதாரக் குறியீட்டெண்ணை வெளியிட்டு, மாநிலங்களுக்கு இடையே நிலவும் சுகாதார விழிப்புணர்வுக்கு இடையூறாக நிலவும் எழுத்தறிவு, ஊட்டச்சத்துள்ள உணவு, ஆரம்ப சுகாதாரம் ஆகியவற்றை கோடிட்டு காட்டியிருப்பது மத்திய அரசின் 'நிதி ஆயோக்' அமைப்பின் வெற்றிக்கு முதல் படி. தனியார் மருத்துவமனையில் அதிகம் செலவிடுவதைத் தடுத்து, அரசு மருத்துவமனைகளிலே குறைந்த செலவில் குணப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்ட எடுக்கும் முயற்சி நடைமுறைப்படுத்தப்படுமானால் வெற்றியே.

எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

நடந்தே வந்த துணைவேந்தர்!

துரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிய வ.சு.ப. மாணிக்கம் மிகவும் எளியவர். காரை அவசியமான காரியங்களுக்குத் தான் பயன்படுத்துவார். நடந்தே அலுவலகம் வந்துவிடுவார். சென்னையில் சாதாராணமான விடுதியில்தான் தங்குவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றிய வே.வசந்திதேவி, ஆசிரியர்கள் நியமனத்தில் நேர்மையாகவும் திறமையாகவும் செயல்பட்டு தொ.பரமசிவம் போன்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்தவர்.

- இரா. முத்தையா துணைப் பதிவாளர் (ஓய்வு). சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x