Published : 08 Feb 2018 08:08 AM
Last Updated : 08 Feb 2018 08:08 AM
மீனவர்களை மறந்துவிட்டோமா?
பி
ப்ரவரி 7 அன்று வெளியான ‘தீர்ந்துபோனதா ஒக்கியின் பெருந்துயர்?’ கட்டுரை படித்ததும் மனம் கனத்தது. கட்டுரையாளர் குறிப்பிடுவதைப் போல ஒரு நிகழ்வுக்குப் பிறகு இன்னொரு நிகழ்வு நடந்துவிட்டால் முந்தைய நிகழ்வை மறந்துவிடுகிறோம். அடுத்தடுத்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசத் தொடங்குகிறோம். கடலுக்குள் சென்ற 122 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என்ற செய்தி மிகுந்த வேதனைதருகிறது. அந்த மீனவர்களின் குடும்பத்தினர் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதை நினைத்துப்பார்க்கும் நமக்கே நெஞ்சமெல்லாம் பதறு கிறதே, அவர்களின் நிலை எப்படி இருக்கும்? ஒக்கி புயலின் பெருந்துயரம் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மட்டுமே நேர்விட்ட துயரம் என ஒதுங்கிவிட முடியுமா? ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் அந்தக் கவலையும் பொறுப்பும் வேண்டாமா?
- கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.
அடிப்படை இயல்புக்கு முரண்
பி
ப். 6-ல் வெளியான ‘அகதிகளுக்காகத் திறக்காதா இந்திய இதயத்தின் கதவுகள்?’ கட்டுரையில் அகதிகளின் உன்மையான நிலையைக் காட்டியுள்ளார் கோபாலகிருஷ்ண காந்தி. உயிருக்குப் பயந்து தன் சொந்த நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறுபவர்களை இந்தியா இதுவரையில் எவ்வளவு இரக்கத்தோடு அணுகியுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. உலக நாடுகளின் மத்தியில் இந்தியா ஒரு தர்ம சிந்தனையுள்ள நாடாகவே விளங்குகிறது. அகதிகளின் எண்ணிக்கை அதிகமாவதால், இந்தியாவுக்கு பிரச்சினை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் தன் சொந்த நாட்டில் சித்ரவதை களுக்கு உள்ளாக்கப்பட்டு, உயிருக்குப் பயந்து புகலிடம் தேடிவரும் மனித உயிர்களுக்குக் கதவடைப்பது இந்தியா வின் அடிப்படை இயல்புக்கு முரணானது.
- தே.பீட்டர் ராஜ், திருவண்ணாமலை.
உள்ளது உள்ளபடி..
ஆ
ய்வு என்பது உள்ளதை உள்ளபடியே அறிந்து எழுதுவது. ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஆராய்ச்சி நூல்களில் ஒன்றான ‘ஆஷ் அடிச் சுவட்டில் - அறிஞர்கள், ஆளுமைகள்!’ தொகுப்பை முன்வைத்து, அருமையானதொரு விமர் சனத்தைத் தந்துள்ளார் பிரபஞ்சன். போப் கல்லறையில் ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்னும் வாசகம் பொறிக்கப் படவே இல்லை என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்து கூறியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். ஆளுமைகள் பற்றிய சித்திரங்கள் இத்தொகுப்பை மிகவும் உயர்த்துகிறது என்று கட்டுரையை நிறைவுசெய்துள்ளார்.
- பொன்.குமார், சேலம்.
சோகமான சுமை
சேகர் குப்தா எழுதிய ‘பாவம்.. நடுத்தர மக்கள்’ கட்டுரை நடைமுறை யதார்த்தத்தைப் பிரதிபலிப் பதுபோல் உள்ளது. மாத சம்பளதாரர்களின் எதிர்கால நம்பிக்கையே சேமிப்புதான். உதாரணத்துக்கு அஞ்சலகத்துக்குப் பொது வைப்புநிதி வருடாந்திர வட்டியாக 8.3% வழங்கிவந்தது. தற்போது, 7.4% வழங்குகிறது. அதுவும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாறக்கூடியது. செல்வமகளுக்கும் 9.1% லிருந்து 8.3% ஆகக் குறைந்துள்ளது. வீட்டுக் கடன், வாகனக் கடன் களுக்கு எவ்விதச் சலுகையும் இல்லை. கசப்பை இனிப்பாகக் கருதவைக்கும் பக்குவத்துக்கு மக்கள் சென்றுகொண்டுள்ளனர். ஏற்கெனவே, மானிய விலையில் ரேஷன் வாங்கும் பணத்தை வங்கியில் வரவுவைப்பது, சிலிண்டர் விலையில் ஏற்றம், பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றால் நடுத்தர மக்கள் தொடர்ந்து சிரமப்படுகின்றனர். அவசரச் சிகிச்சை செய்யாமல் ஹைடெக் மருத்துவ வசதி இருந்து என்ன பயன். ‘கடமைக்குக் கண்ணீர் இல்லை, ஒப்புக்கொள்கிறேன்.. கண் கூடவா இல்லை?’ எனும் கவிக் கோவின் வரிகளே நினைவுக்குவருகின்றன.
- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT