Published : 06 Feb 2018 08:55 AM
Last Updated : 06 Feb 2018 08:55 AM
தண்ணீர் சேகரிப்பு இயக்கம்!
பி
ப்ரவரி 5 அன்று வெளியான ‘தாகத்தில் தவிக்கும் கேப் டவுன்: தயாராக இருக்கிறதா இந்தியா?’கட்டுரை மூலம் அபாய ஒலி எழுப்பியுள்ளார் செல்வ.புவியரசன். கேப் டவுனில் வசிக்கும் 40 லட்சம் மக்கள் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படும் என்றால், 46.46 லட்சம் சென்னை நகர மக்களும் தண்ணீருக்காகத் தவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஏற்கெனவே, பல நாடுகள் தண்ணீர்ப் பஞ்சத்தில் உள்ளன. வெனிஸ் நகரத்து சுற்றுலா ஈர்ப்பான கால்வாய்கள் வறண்டுவிட்டதாத ‘வணிக வீதி’ செய்தி வெளியிட்டுள்ளது. காடுகள், நீர்நிலைகள் அழிக்கப்பட்டு, கான்கிரீட் காடாகிய சென்னை மாதிரியே தமிழக கிராமங்களும் குடிநீரின்றித் தவிப்பதைத் தொலைக்காட்சியில் காண முடிகிறது. இவ்வாண்டு பெய்த மழையும் பற்றாக்குறை என வானிலைத் தரவுகள் தெரிவிக்கின்றன. நீர் நிலைகளைத் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டது. இருந்தும், தூர்வாரப்படவில்லை என ஒவ்வொரு ஊரிலும் கூறுகிறார்கள். மழைநீர் சேகரிப்புத் திட்டம், தடுப்பணை கட்டுதல் ஆகியவற்றில் அரசு முனைப்புக் காட்டவில்லை. அரசை நம்பிப் பயனில்லை. இளைஞர்கள் தண்ணீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
கல்வித் துறையில் கேவலம்
பா
ரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கைது செய்தி, கல்வியாளர்கள் அனைவரை யும் அதிர வைத்திருக்கிறது. நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான அறிவைக் கொடுக்கும் பள்ளிகள், கல்லூரிகளின் தலைவராக விளங்கும் துணைவேந்தர் ஒருவர் லஞ்சம் வாங்குகிறார் என்றால், அதைவிட கல்வித் துறைக்கு என்ன கேவலம் இருக்க முடியும்? இவருடைய நிர்வாகத்தில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் எப்படித் தரத்தை எதிர்பார்க்க முடியும்? அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து, கல்வித் துறையில் இருக்கும் சீர்கேடுகளைக் களைய வேண்டும்.
- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT