Published : 20 Feb 2018 09:46 AM
Last Updated : 20 Feb 2018 09:46 AM

இப்படிக்கு இவர்கள்: நீர் மேலாண்மையில் மாற்றம் வேண்டும்

நீர் மேலாண்மையில் மாற்றம் வேண்டும்!

கா

விரி நதிநீர்ப் பகிர்வு தொடர்பான இறுதித் தீர்ப்பு வந்துவிட்டது. ஏமாற்றமும் வருத்தமும் நமக்கிருந்தாலும் அடுத்து செயலில் இறங்க வேண்டும். நீர் மேலாண்மை இதுவரை பேசுபொருளாக இருந்தது போதும், செயல்வடிவமாக வேண்டும். காவிரிப் படுகையில் உள்ள மாவட்டங்களில் நீர்த் தேவை குறைவானப் பயிர் வகைகளைச் சாகுபடி செய்ய வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்புப் பாசனம் பயன்படுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீரைச் சேமிப்பது போர்க்காலத் தேவை. மழை நீரையும் வீணாக்கக் கூடாது. இஸ்ரேல் போன்ற நாடுகளில் பயிற்சிபெற நமது விவசாயிகளை அனுப்ப வேண்டும்.

- சிவ. ராஜ்குமார், சிதம்பரம்.

மிழகத்துக்கு உரிய காவிரி நீர் அளவு குறைக்கப்பட்டிருப்பதைக் கணக்கிட்டு பயிர் வகைகளையும் சாகுபடி பரப்பையும் திட்டமிட வேண்டும். மேலாண்மை வாரியத்தை ஏற்படுத்தத் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆண்டு முழுவதும் கிடைக்கும் நீர், அதில் மாதவாரியாக எவ்வளவு என்பதை அட்டவணையாக்கி அதைப் பெற்றாக வேண்டும். மழைக்காலங்களில் அணையின் பாதுகாப்புக்காகக் கர்நாடகம் வெளியேற்றும் உபரி.நீரை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.வல்லுநர் குழுவை உருவாக்கி அவர்களது ஆலோசனைகளை மூன்று மாதத்துக்கு ஒருமுறை பெற்று தொடர் நடவடிக்கை எடுக்க வேணடும். விவசாயிகள், வேளாண்மைப் பல்கலைக்கழகம், அரசுத் துறைகள் இணைந்து செயல்படுவது முக்கியம்.

- ந மனோகரன், சிங்காநல்லூர்.

அரசு வங்கிகள்

தனியார்மயமாக்கப்படக் கூடாது!

பொ

துத் துறை வங்கிகள் குறித்த சேகர் குப்தாவின் கட்டுரை ஒருதலைப்பட்சமாக உள்ளது. சாமான்யனுக்கும் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே 14 பெரிய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அந்த சாமான்யன் விவசாயம், கல்வி, சுயதொழிலுக்காகக் கடன் கேட்டால் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பிணை ஆகியவற்றைக் கேட்கிறார்கள். இதையெல்லாம் மீறி கடன் பெற்று ஒரிரு தவணையைச் செலுத்தவில்லை என்றால்கூட முகவர்கள் மூலமாக தாக்குகின்றனர். பெரும் பணக்காரர்கள் கோடிக்கணக்கில் கடன் பெற்று அரசு வங்கிகளை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டில் தஞ்சமடைகிறவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி என இவற்றைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நடுத்தர வர்க்கத்தையும், சாமான்யனையும் குறிவைத்து மேற்கொள்கிற நடவடிக்கைகள்தான் கடுமையாக இருக்கின்றன. தணிக்கை, நிர்வாக நடைமுறைகளில் உள்ள ஓட்டைகளைச் சரிசெய்ய நினைக்காமல் அரசு வங்கிகளைத் தனியாரிடம் விற்று விட வேண்டும் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலான சூழலைப் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றிடும் தந்திரம்தான் அதில் தென்படுகிறது.

- சே. செல்வராஜ், தஞ்சாவூர்.

கமலின் முடிவு சரியா?

ரசியலில் நுழையவிருக்கும் நடிகர் கமல்ஹாசன் மறைந்த அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்க முடிவெடுத்திருப்பது சரியா? பகுத்தறிவுப் பாதையில்தான் தனது அரசியல் பயணம் இருக்கும் என்று கூறிவரும் கமல்ஹாசனுக்கு, பெரியாரின் ஈரோட்டிலிருந்து அந்தப் பயணத்தைத் தொடங்குவதில் என்ன தயக்கம்? வோட்டு அரசியல் என்று வரும்போது கமலும் சராசரி அரசியல்வாதியாகவே கணக்குப் போடுகிறார் என்று இதை எடுத்துக்கொள்ளலாமா?

- வி.எஸ்.சண்முகானந்தன், நெல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x