Published : 22 Jan 2018 10:38 AM
Last Updated : 22 Jan 2018 10:38 AM
விவசாயிகளை வாழவைப்போம்!
வி
யாழன் அன்று வெளியான (18.01.18) ‘விவசாயிகளை அரசு கைவிடக் கூடாது’ என்கிற தலையங்கம் வாசித்தேன். விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் இருந்தாலும் நஷ்டம், குறைந்த விளைச்சல் இருந்தாலும் நஷ்டம் என்பதை எண்ணும்போது மனதுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல, இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அளிப்பது விவசாயிகள்தான். வரும் பட்ஜெட்டில் மத்திய அரசு, விவசாயிகளுக்குக் கூடுதல் பலன்கள் அளிக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
- எம்.ஆர்.லட்சுமிநாராயணன்,
நாமக்கல்.
எந்த விதத்திலும் நியாயமில்லை
த மிழக அரசுப் பேருந்துகளில் திடீரென அமலுக்கு வந்த பயணக் கட்டண உயர்வு, அனைத்துத் தரப்பு மக்களையும் பெருமளவில் பாதித்துள்ளது. கட்டண உயர்வு சராசரியாக 50%-லிருந்து 60% வரை உயர்த்தியுள்ளது எந்த விதத்திலும் நியாயமாகாது. இப்படி ஒரே நேரத்தில் அதிக அளவு தொகையை ஏற்றுவதற்குப் பதில், கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றியிருந்தால், இந்த அளவுக்குச் சுமை தெரிந்திருக்காது. மக்களுக்குச் சேவை செய்வதாகக் கூறிக்கொள்ளும் அரசு, அவர்களை இப்படி இன்னல்படுத்துவது, ஆட்சியில் இருப்போரின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. கடுமையான கட்டண உயர்வு நுகர்பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். அரசு இதற்கான மாற்றுத் திட்டங்களை தயார்நிலையில் வைத்திருக்கிறதா?
- கே.ராமநாதன், மதுரை.
அவசியம் உணர்வோம்
த
மிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்குரிய இடத்தைத் தேர்வுசெய்வதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் மையமான இடத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். மருத்துவம் மக்களுக்கு எந்த அளவு அவசியமானது என்பதை உணர்ந்து, விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசிடம் வலுவான கோரிக்கையைத் தமிழக அரசு வைக்க வேண்டும்.
- நன்னிலம் இளங்கோவன்,
மயிலாடுதுறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT