Published : 18 Jan 2018 09:59 AM
Last Updated : 18 Jan 2018 09:59 AM

இப்படிக்கு இவர்கள்: பாஜகவின் தலையீட்டில் நீதித் துறை!

பாஜகவின் தலையீட்டில் நீதித் துறை!

ச்ச நீதிமன்றம் சரியாக நடைபெறவில்லை என்பதை மூத்த நீதிபதிகள் நான்கு பேரும் சேர்ந்து குற்றம்சாட்டியிருப்பது மிகுந்த கவலை தரும் நிகழ்வு. இந்தப் பிரச்சினை அவர்களுக்குள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் ஒரு தரப்பினர். இல்லை... ஊடகத் துறைக்குச் சென்றது சரியான வழிதான் என்கின்றனர் மற்றொரு தரப்பினர். இந்திய அரசியல் அமைப்பே நான்கு தூண்களாகப் பகுக்கப்பட்டு ‘மக்கள், அரசாங்கம், நீதித் துறை, ஊடகத் துறை’ என்று ஒன்றுக்கொன்று கண்காணித்து உதவ வகை செய்துள்ளது.

நீதித் துறை பிரச்சினையை எதிர்கொள்ளும் நேரத்தில், ஊடகத் துறையின் உதவியை நாடியதில் தவறில்லை. அரசியல்வாதிகள் நேர்மையற்றுச் செயல்பட ஆரம்பித்த நாள் முதல், அரசாங்கத் தூண் சில சர்ச்சைகளுக்கு உள்ளானது. சற்று பின் நோக்கிப் பார்த்தால், அவசர நிலை அமல்படுத்திய பிரதமர் இந்திரா காந்தியின் செயல் நேரடித் தாக்குதல். அது பத்திரிகைத் துறையைப் பெருமளவில் பாதித்தது. அந்தக் காலகட்டத்தில் நீதித் துறையின் உதவியுடன் அரசியல் கட்சிகளின் முயற்சியால் பத்திரிகை துறை மீண்டது. அரசியல் அமைப்புச் சட்டமும் பெரும் மாற்றத்தைக் கண்டது. அது பின்னர் இந்திரா காந்தியாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீண்ட கால (அவசர நிலைக்குப் பின் 40 ஆண்டு) அரசியல் நிகழ்வுகளும், உலகமயமாக்கலும் அரசியல்வாதிகளை ஊழல்வாதிகளாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்தது. இன்று பாஜக ஆட்சியின் தலையீடு நீதித் துறையில் இருக்கிறது. நீதித் துறை ஊடகத் துறையை நாடியுள்ளது. இதை இந்திய ஊடகம் எப்படிக் கையாளப்போகிறது என்பதைப் பொருத்தே, இந்திய ஜனநாயகம் வலுப்பெறுமா அல்லது வலுவிழக்குமா என்பதை வரலாறு முடிவு செய்யும்!

- வெ.ரா.ஆனந்த், வரலாற்று - அரசியல் ஆய்வாளர்.

வழிகாட்டும் பக்கங்கள்

ண்டு முழுவதும் படிப்பதற்கான புத்தகங்களை முன்கூட்டியே வாங்கிச் சேமிக்கும் அனைவருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஒரு திருவிழா. அதன் திகைப்பில் சிக்கியவர்கள் திருவிழா முடிந்த பிறகு ‘அடடா... இந்தப் புத்தகத்தை வாங்கியிருக்கலாமே! அப்படி ஒரு புத்தகம் வெளிவந்ததாகவே தெரியவில்லையே’ என்று குறைபட்டுக்கொள்ளவும் நேரும். அந்தக் குறையை நீக்கும் வண்ணம், ‘தி இந்து’ வெளியிட்டுவரும் புத்தகக் காட்சி சிறப்புப் பக்கங்கள் அமைந்துள்ளன.

ஜன.17-ல் க.மோகனரங்கன் எழுதிய ‘கவனத்தை ஈர்த்த கவிதைத் தொகுப்புகள்’ கட்டுரை என்னைப் போன்ற கவிதை நூல் விரும்பிகளுக்கு நல்லதொரு பட்டியலாகத் திகழ்ந்தது. பயன்படுத்திக்கொள்வேன். ‘தி இந்து’வுக்கு நன்றி.

- கே.விழியரசு, ஆரணி.

பாமரர்களுக்கும் பயன்பட வேண்டும்

ஸ்ரோவின் புதிய தலைவரான கே.சிவன், ‘‘விண்வெளி ஆராய்ச்சி நிலையத் திட்டங்கள் பாமர மக்களுக்கும் பயன்படும் வகையில செயல்பட வேண்டும்’’என்று கூறியிருப்பது எல்லோராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அவருடைய இந்த அறிவிப்பு, அவரது பண்பையும் நாட்டுமக்கள் மீது அவருக்குள்ள பற்றையும் தெளிவாக்குகிறது.

- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).

திருத்தம்

னவரி 17 அன்று வெளியான ‘எம்.ஜி.ஆர்: வரலாற்று நாயகன்!’ கட்டுரையில், 1989-ல் நடந்த திருப்பத்தூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1981-ல் நடந்த திருப்பத்தூர் சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் என்று திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறோம்.

- ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x