Published : 22 Dec 2017 10:30 AM
Last Updated : 22 Dec 2017 10:30 AM

இப்படிக்கு இவர்கள்: விரைந்து செயல்பட்டிருக்க வேண்டும்!

விரைந்து செயல்பட்டிருக்க வேண்டும்!

டி

சம்பா் 21 அன்று வெளியான, ஜோ டி குரூஸ் எழுதிய ‘ஒக்கி - தாமதத்தின் பேரிடா்’ கட்டுரை படித்தேன். கொடூரமான ஒக்கி புயலால் மரணத்தின் விளிம்பில் சிக்கித் தவித்த அந்தோனிதாஸின் வலிநிறைந்த கண்ணீா்க் கதையை அவரின் மொழியிலேயே பதிவுசெய்திருப்பது, அவர்கள் அன்றாடம் படும் அவலங்களை அதன் சாரம் குறையாமல் உணா்ந்துகொள்வதற்கு உதவுகிறது. மீனவர்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சினைகள் மக்களுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது. அதிகாரிகளும், ஆட்சியாளா்களும் மீனவா்களின் துயரங்களை, நிச்சயமற்ற வாழ்க்கையை அலட்சியமாகப் பார்க்கிறார்கள். ஒக்கி புயல் குறித்த தகவல்களை முன்கூட்டியே கணித்து, சரியான நேரத்துக்குக் கடலோர மக்களுக்கு அறிவித்திருந்தால், எண்ணற்ற உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். புயலின் உக்கிரம் குறைந்தவுடன், அரசும் அதிகாரிகளும் விவேகத்துடனும் அக்கறையுடனும் விரைந்து செயல்பட்டிருந்தால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இச்சூழலில், மீனவா்களுக்கென்று தனி அரசியல் அதிகாரம் வேண்டும் என்ற தேவை இப்போது உருவாகியிருக்கிறது.

- அ. இருதயராஜ், லென்ஸ் அமைப்பு, மதுரை.

பரவசப்படுத்திய எழுத்துகள்!

டி

சம்பர் - 21 அன்று ‘வியாழன் அனுபவம்’ பகுதியில் எழுத்தாளர் இளவேனில் எழுதிய ‘ஆத்மா என்றொரு தெருப் பாடகன்’ புத்தகத்துக்கு அணிந்துரை பெற கருணாநிதியைச் சந்தித்தபோது, உங்களைக் கடுமையாக விமர்சித்தவன் என்று அறிமுகப்படுத்தியவுடன் உடனே கருணாநிதி, கார்க்கி பத்திரிகையில் ‘என் எழுத்துகளால் என்னையே அடித்தவர்’ என எழுதியதைக் காட்டியது. அணிந்துரை எழுதி, அவரே ஆள் அனுப்பி, எழுத்தாளருக்காகக் காத்திருந்து, அவருக்கு சிகரெட் பிடிக்க வேண்டாம் என அறிவுரை கூறியது, அவருடைய அறிவுரையை ஏற்று புகைபிடித்தலை விட்டொழித்தது என இளவேனிலின் எழுத்துகள் படிக்கப் படிக்கப் பரவசத்தை ஏற்படுத்தின.

- வ.சக்கரபாணி, அல்லப்பனூர்.

பெயரைக் கெடுத்துக்கொண்ட நிர்வாகம்

ஜெ

யலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர் சிகிச்சைக்குப் பிறகு, ஜெயலலிதா நடக்கிறார், வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர் விரும்பினால் வீட்டுக்குச் செல்லலாம் என்று தினம் ஒரு அறிக்கை வெளியிட்டுவந்தது மருத்துவமனை நிர்வாகம்.

ஜெயலலிதா இறந்து ஒரு வருடத்துக்குப் பிறகு இப்போது அப்போலோ மருத்துவமனையின் சேர்மன், சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும் என்பதற்காக தவறான அறிக்கை வெளியிட்டதாகக் கூறுகிறார். சட்டம் - ஒழுங்கைப் பற்றிக் கவலைப்பட இவர் என்ன தமிழகத்தின் முதல்வரா அல்லது ஆளுநரா? தவறான தகவல்களைக் கொடுத்து அப்போலோ மருத்துவமனை அதன் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது.

- எஸ்.மோகன், கோவில்பட்டி.

இன்றைய தேவை

டி

சம்பர், 16 அன்று வெளியான க.நெடுஞ்செழியனின் நேர்காணல் படித்தேன். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆசீவக ஆய்வுகளுக்காகவே ஒப்படைப்புசெய்து சீரிய பணியாற்றிவரும் சிறந்த ஆய்வாளர் அவர். என்னைப் போன்ற இளம் பேராசிரிய ஆய்வாளர்களுக்குச் சிறந்த ஊக்கியாகத் திகழ்பவர். அவர் 1999 - 2002 காலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டிருந்த பல்கலைக்கழக நல்கை ஆணைய ஆய்வுப் பெருந்திட்டமான ‘தமிழ் இலக்கியத்தில் ஆசீவகம்’ என்னும் திட்டத்தில் ஆய்வுத்தகைமையாளராய்ப் பணிபுரிந்தேன்.

அவரது ஆய்வு ஒளியில், ஆசீவக ஆய்வுகள் மேற்கொண்டு, இயற்கை வழிபாட்டை வைதீகம் அழித்ததைப் பதிவுசெய்ய வேண்டும் என நினைக்கிறேன். இது இன்றியமையாத இன்றைய தேவையாக உள்ளது.

- சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை, மா.மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x