Published : 02 Nov 2017 09:30 AM
Last Updated : 02 Nov 2017 09:30 AM

இப்படிக்கு இவர்கள்: பாராட்டுக்குரிய முன்னுதாரணம் ‘தி இந்து’ உருவாக்குவது!

மு

துபெரும் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்ற 60 ஆண்டு பணிகளை நினைவுகூரும் வகையில் வெளிவந்துள்ள ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலிலிருந்து, ‘தி இந்து’ நடுப் பக்கத்தில் வெளியிட்டுவரும் கட்டுரைகள், பேட்டிகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். ஒரு ஆளுமையின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றிப் படிக்கையில்தான் அவருடைய அரசியல் வாழ்வின் முழுப் பரிமாணங்களும் புலப்படுகின்றன. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் பேட்டி ஒரு முக்கியமான அரசியல் ஆவணம். நாமறிந்த வரலாறுதான் என்றாலும், திராவிட இயக்கத்தைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழ்நாட்டுக்கு வெளியிலுள்ள ஆய்வறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் ஒரு புதிய பார்வையைத் தருகின்றன. இதழியலில் முன்னுதாரணம் இல்லாத முயற்சி இது. ‘தி இந்து’ ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். தொடரட்டும் இந்தப் பணி!

- டி.கே.ரங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சென்னை.


நினைவில் நிற்கும் கடிதம்

அக். 30 நாளிதழில் மேலாண்மை பொன்னுச்சாமி யின் மறைவு குறித்த செய்தி அறிந்து மனம் துயரத்தில் ஆழ்ந்தது. அவரைப் பற்றிய கட்டுரை மனதை நெகிழச்செய்தது. நான் 2011-ல் சூர்ய வேர்வை என்ற அவரது சிறுகதைத் தொகுப்பை வாசித்துவிட்டு விமர்சனம் எழுதியிருந்தேன். பெரும் எழுத்தாளர் என்ற பெருமை சிறிதும் இல்லாமல், அவர் கைப்பட பதில் கடிதம் எழுதி உயர்ந்து நின்றார். அவரின் மறைவுச் செய்தி அறிந்து, பத்திரப்படுத்திய அவரின் கடிதத்தை எடுத்து வாசித்து மனம் கலங்கிப் போனது.

- யசோதாபழனிசாமி, ஈரோடு.


அறியாத செய்திகள்!

ருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி பல சுவாரஸ்யமான தகவல்களுடன் உள்ளது. குறிப்பாக கருணாநிதி - எம்ஜிஆர் இருவரிடையே பிளவு உண்டாகி, எம்ஜிஆர் புதுக் கட்சி ஆரம்பித்தது குறித்த நிகழ்வுகள், இதுவரை வெளி உலகம் அறிந்திராத புதிய செய்திகள். இதுவரை எம்ஜிஆர் பிரிவு என்பது, கணக்கு கேட்டதால் என்றே அறியப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் இருந்தன என்பதும் தெரியவருகிறது. இத்தனையையும் தாண்டி இருவரிடையே இருந்த ஆழமான அன்பையும், நட்பையும் சம்பவங்களுடன் விவரித்திருந்தது நெகிழச் செய்கிறது.

- மு.செல்வராஜ், மதுரை


கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரை

கடை யானையும் கொசுவும் என கதையைத் தொடங்கிய எஸ்.ராமகிருஷ்ணன், முடிவில் மனிதர் களுக்கு அறிவுறுத்தியுள்ளார். திருமணம் என்னும் பெயரில் தேவையற்ற கெளரவத்துக்காகவும் பணம் இருப்பதைக் காட்டிக்கொள்ளவும் செய்யப்படும் செலவு கள் தேவையற்றவை என்கிறார். அனைவரும் கடைப் பிடிக்க வேண்டிய அறிவுரை.

- பொன்.குமார், சேலம்.


விலகி நிற்கும் அரசாங்கம்

மக்களிடமிருந்து அரசுத் துறை எவ்வளவு விலகி யிருக்கிறது என்பதற்கு என் அனுபவமே உதாரணம். 2014-15-ல் ரூ. 2 லட்சத்துக்கு மேல் ஒரு நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு வந்துள்ளதைத் தெரிவிக் காததற்கும், 2015-16-க்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாததற்கும் விளக்கம் கேட்டு, பதிவு அஞ்ச லில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் அக்கடிதம் இருந்தது. வருமான வரி வரம்புக்குள் தான் என் வருமானம் இருந்தது. எனக்கு ஆங்கிலமோ, இந்தியோ தெரிந்திருக்கும்; கணினியும் அதைப் பயன்படுத் தும் திறனும் என்னிடம் இருக்கும் என்பன போன்ற பல அனுமானங்களோடு அக்கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. மக்களுக்கான அரசு இப்படியா சிக்கல்களுடன் இருப்பது?

- சீதா ராஜகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x