Published : 23 Nov 2017 10:43 AM
Last Updated : 23 Nov 2017 10:43 AM

இப்படிக்கு இவர்கள்: மாற்றுக் கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும்!

மாற்றுக் கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும்!

வ. 22-ல் வெளியான தலையங்கத்தில் ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்த கருத்தைப் படித்தபோது, பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கு எதிரான போராட்டம் நினைவுக்கு வந்தது. நாவலாசிரியருக்கு ஆதரவாக, அதாவது கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஊடகங்களில் குறிப்பாக ‘தி இந்து’வில் பல கட்டுரைகள் வெளியானது நினைவில் இருக்கிறது. ஒரு கருத்தைப் பண்பான மாற்றுக் கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். நாகரிகமற்ற எதிர்வினைகள் அரசியல் லாபம், சுய விளம்பரத்தின் அடிப்படையில் அமைந்தவை என்பதில் சந்தேகமில்லை. ஆரோக்கியமான ஒரு சமூகத்தில் இவையெல்லாம் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

- இரா.ரமேஷ் குமார், அமராவதி நகர்.

குழந்தைகளின் நலன் காப்போம்

தை சொல்லுமா கைபேசிகள் (16.11.17) கட்டுரை படித்தேன். நவீன வாழ்க்கை முறை கூட்டுக் குடும்ப முறையை அடியோடு சிதைத்துவிட்டது. இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் பரிதாபத்துக்குரியவர்கள். விளைவு, குழந்தைகள் தனியாக வளர வேண்டிய சூழல். இன்று பல குடும்பங்களில் குழந்தைகள் அடம்பிடிக்கும்போதோ, உணவு சாப்பிடவில்லை என்றாலோ விளையாட்டுப் பொருளாகக் காண்பிக்கப்படுவது கைபேசிகள்தான். குழந்தைகளும் அதற்கு அடிமையாகின்றனர். ஆகையால், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முற்படும்போதுதான் அவர்களும் அதிலிருந்து விடுபட்டு வேறு செயல்களில் ஈடுபடுவார்கள். குழந்தைகளின் நலன் பெற்றோர் கைகளில்தான் இருக்கிறது.

- ப.சுவாமிநாதன், சென்னை.

மாற்றம்.. ஏற்றம் தருமா?

பு

திய பாடத்திட்டங்களுக்கான ஏற்பாட்டில் இருக்கிறது தமிழக அரசு. மக்களுடைய கருத்தையும் கேட்டிருக்கிறது. நிறைய மாற்றம் கோரும் அமைப்புதான் நம்முடைய கல்வித் துறை. ஒரு நல்ல பாடத்திட்டம் மாணவர்களிடம் தனி வகுப்புகளோ, தனிப் படிப்போ நிர்ப்பந்திப்பதாக இல்லாமல் இருக்க வேண்டும். இன்றைய சூழல் தொடக்கப் பள்ளியிலிருந்து தனிப் பயிற்சிக்குச் செல்வதை நிர்ப்பந்தப்படுத்துவதாக இருக்கிறது. மாறாக, பள்ளி நேரத்திலேயே கற்றல் முழுமையாக நடைபெற வேண்டும். அதற்கேற்ப நம்முடைய புதிய பாடத்திட்டம் அமைய வேண்டும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

பதிப்பகங்களுக்கு என்னவாயிற்று?

மீபத்தில் அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச புத்தக் காட்சியில் எந்த தமிழ்ப் பதிப்பகங்களும் கலந்துகொள்ளாதது வேதனையளிக்கிறது. மற்ற மொழிகளைவிட இலக்கியச் சுவையும் காப்பியத் தொன்மைகளை உள்ளடக்கிய மொழி, உலகப் பொதுமறை திருக்குறளை அருளிய மொழி, செம்மொழி என்று நம் ஊரிலேயே புகழ்ந்துகொள்வதால் என்ன பயன்? தமிழகத்துக்கு வெளியே மொழியையும், முக்கிய படைப்புகளையும் கொண்டுசென்றிருக்க வேண்டாமா? அண்டை மாநிலமான கேரள அரசுகூட தன் சொந்த செலவில் மலையாளப் படைப்புகளை காட்சிப்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு ஏனோ இதில் கவனம் கொள்ளவில்லை. பதிப்பகங்களுக்கு என்னவாயிற்று?

- நி.ஒஜிதுகான், முத்துப்பேட்டை.

தொடரட்டும் பன்முக சேவை!

தி

ருச்சி மாவட்ட மைய நூலகத்தின் பன்முக சேவை, வாசிப்பைத் தாண்டி சமூக நோக்கோடு ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலும் பங்குகொள்வதைப் பற்றிய செய்தி (நவம்.17) அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல நூலகங்களின் செயல்பாடுகள் வாசகர்களுக்கு மனநிறைவை அளிப்பதில்லை. ஆனாலும், விதிவிலக்காக திருச்சி மாவட்ட நூலகர் சிவக்குமார் போன்று அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவருக்கு வாழ்த்துகள்!

- கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x