Published : 22 Nov 2017 10:26 AM
Last Updated : 22 Nov 2017 10:26 AM
விருதுக்குப் பின்னர் விரும்பப்படும் எழுத்து!
இ
ணையம் உலகத்தவர்கள் அனைவரையும் இணைத்துவிட்டதாய்க் கருதினாலும், இன்னும் பிற மாநில எழுத்தாளர்களின் படைப்பை நாமோ நம் படைப்புகளை அவர்களோ வாசித்தறியவில்லை என்பதே யதார்த்தம். விருதுகளுக்குப் பின்தான் நிறைய எழுத்தாளர்களின் படைப்பு மொழி எல்லைகளைக் கடந்து வாசிக்கப்படுகிறதோ என்றும் தோன்றுகிறது. பஞ்சாபி எழுத்தாளர் கிருஷ்ணா ஸோப்தி எழுதிய படைப்புகள் அனைத்தும் ஞானபீடம் எனும் விருதுச் சாவியால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அடக்கி வைக்கப்பட்ட பெண் குரலின் படைப்பு வெளிப்பாடாக அவரது படைப்புகள் திகழ்கின்றன. இருபது வயதிலிருந்தே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளை நுட்பமாக உள்வாங்கி எழுதத்தொடங்கினார். அவர் படைப்புகளின் கருவாக அவை மாறின. அவர் எழுதும் எழுத்துகள் யாவும் அவர் வாழ்வில் நிகழ்ந்த அல்லது அவரைப் பெரிதும் பாதித்த நிகழ்வுகளின் கலை வடிவம்! ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குள் அவரை அவரது எழுத்துகளோடு அ.வெண்ணிலா விரிவாக ‘தி இந்து’ கலை ஞாயிறு பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
- சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.
காங்கிரஸ் சுனாமி?!
கு
ஜராத்தில் காங்கிரஸ் அலை வீசுவது காங்கிரஸின் பலத்தால் அல்ல; பாஜகவின் பலவீனத்தால். ‘குஜராத் தில் காங்கிரஸ் அலை?’ (நவ.16) கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல, குஜராத்தின் முக்கிய இனத்தவர்களான பட்டேல்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டி யல் இனத்தவர்கள் பாஜகவுக்கு எதிராக மாறியுள்ளனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் மோடிக்கும் பாஜகவுக்கும் செல்வாக்கு குறைந்துவருவது கண்கூடு. 2019 பொதுத் தேர்தலில் வெற்றிபெற, மோடியின் தற்போதைய செல்வாக்கு போதாதென்று ஆர்எஸ்எஸ் தலைவரும் சொல்லியுள்ளார். காங்கிரஸ் வீசும் அலையை சுனாமி யாக மாற்றினால்தான் வெற்றி வாகை சூடமுடியும்.
-அ.ஜெயினுலாப்தீன், சென்னை.
முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
வெ
ளி மாநிலத்தவரும் டிஎன்பிஎஸ்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற உத்தரவு அதிர்ச்சியைத் தருகிறது. 1923-ல் ஆங்கில ஆட்சியின்போது பொதுத் தேர்வு ஆணையமாகத் தொடங்கி, 1970-ல் தமிழ்நாடு தேர்வாணையமாக மாறியது முதல் இன்றுவரை அதன் உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன் செயல்பாடுகளை அரசியலமைப்புச் சட்ட ஷரத்துகள் 16, 234, 315, 323 தெளிவாக விளக்குகிறது. பிற மாநிலத் தேர்வாணையங்கள் மற்ற மாநிலத்தவரைப் பணியிடங்களுக்கு அனுமதிக்கிறது என்றாலும், தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கே முன்னுரிமை கொடுக்கிறது. மாநில - மத்திய அரசின் உறவை வலுப்படுத்தும் ஏஜெண்ட் அல்ல டிஎன்பிஎஸ்சி. பொறியியல், எம்பிஏ, எம்சிஏ படித்துவிட்டு இளநிலை பணிக்கு விண்ணப்பிக்கிற அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் காலத்தில் டிஎன்பிஎஸ்சி தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- எம்.விக்னேஷ், மதுரை.
தண்டனை போதாது!
ஜெ
யலலிதாவின் தோழி சசிகலா சேர்ந்த 180-க்கும் மேற் பட்ட இடங்களில் வருமானவரித் துறை சோதனை யிட்டு, அள்ள அள்ளக் குறையாத அளவு ஆவணங்களையும் பணத்தையும் நகைகளையும் கைப்பற்றியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 1991- 96 காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இப்போதைய சந்தை மதிப்பு 6,000 கோடிகளுக்கு மேல். தூய்மை என்றால் சுற்றுப்புறத் தூய்மை மட்டுமல்ல என்பதை உணர்த்தும் வகையில், முறைகேடாகச் சம்பாதித்த சொத்துகளைக் கைப்பற்றி ஏலம் விட்டு அரசுக்கணக்கில் சேர்க்க வேண்டும். ஊழலுக்கான தண்டனையை அதிகரிக்கவும் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT