Published : 18 Jul 2014 09:10 AM
Last Updated : 18 Jul 2014 09:10 AM
பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் ஐ.நா, உலகத்தில் அனைவருக்கும் கல்வி என்கிற நிலைப்பாட்டை வற்புறுத்தியுள்ளது வரவேற்கத் தக்கது. ஆனால், நிதி பங்களிப்பதாக உறுதியளித்த நாடுகள் பின்வாங்கு கின்றன எனும்போது, எப்படி இந்த இலக்கை எட்ட முடியும்? முடியும். சில வளமிக்க நாடுகளின் சிறிய அளவிலான அன்பளிப்புகளினால் இதை நிச்சயம் ஈடுகட்டிவிட முடியும். சம்பந்தப்பட்டவர்கள் மனம் வைக்க வேண்டும். அவ்வளவே. மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் கல்வித் தேவைகளையும் இரக்க மனதுடன் செய்ய உலகச் செல்வந்தர்கள் முன்வரலாம். இப்படியெல்லாம் ஆதங்கப்படும்படி வைத்துவிட்டது,
‘நிறைவேறாத இலக்கும் இடைவிடாத பயணமும்’ என்கிற தலையங்கம். நல்லதே நடக்க நம்பிக்கை வைப்போம்.
- இராமகிருஷ்ணன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT