Published : 30 Oct 2017 10:00 AM
Last Updated : 30 Oct 2017 10:00 AM

இப்படிக்கு இவர்கள்: தேவை மருத்துவ ஆராய்ச்சி

தேவை மருத்துவ ஆராய்ச்சி

க்டோபர் 27-ம் தேதி வெளியான, ‘பாரம்பரிய மருத்துவம் சீனா வழிகாட்டுகிறது’ என்ற கட்டுரை படித்தேன். 1970-களில் உலகில் ஏற்பட்ட மலேரியா தொற்றுநோய்க்கு சீனர்கள் பலியானதால், பழமையை வெறுக்கும் மா சேதுங் கூட மக்கள் நலன் கருதி சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறை ஆராய்ச்சிக்கு ஒப்புகை அளித்தார். அதன் விளைவாக, மருத்துவம் பயின்ற யூயூடு என்பவரின் தீவிர முயற்சியால் ‘க்யுங்கோ’ என்ற மூலிகைத் தாவரத்திலிருந்து ‘அர்டிமிசின்’ என்ற மருந்தை உருவாக்கி, சீன மக்களைக் காப்பாற்றியது சீன அரசு. சீனத் தலைமையின் அன்றைய விவேகம், பாரம்பரிய மருத்துவத்தின் பயனைச் சரியான முறையில் வெளிக்கொணர்ந்த தன்மையை இந்தியாவும் தமிழ்நாடும் கற்றுக்கொள்ள வேண்டும். நிலவேம்பின் பயனை உரிய முறையில் ஆராய்ச்சிசெய்து, தமிழர்கள் மட்டுமின்றி உலக மக்களுக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும். அப்படியில்லாமல், வெறுமனே பழம்பெருமை பேசுவதாலோ, அதைக் குறை சொல்வதாலோ யாருக்கும் பலனில்லை.

- ஜீவன். பி.கே., கும்பகோணம்.

ஆன்மிக மணம்

தி

ருச்செந்தூர் மற்றும் கந்த சஷ்டி பற்றிய ஏராளமான தகவல்களுடன் வெளியான ‘சூரசம்ஹாரம் சிறப்பு மலர்’ எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. கந்த சஷ்டிக் கவசம் இயற்றிய பாலன் தேவராயன் சுவாமிகள் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. ஆன்மிக மணத்துடன் நல்ல பல தகவல்களை அளித்த ‘தி இந்து’வுக்கு நன்றி.

- அருள்குமார், கோவை.

தாய்மொழிக் கல்வி

க்.25 அன்று வெளியான ‘கந்துவட்டி ஒழிப்பு பிரச்சினையில் கேரளத்தைப் பின்பற்றுவதில் என்ன தயக்கம்?’ என்ற கட்டுரை, பக்கத்து மாநிலங்களான கேரளம், கர்நாடகம் இவற்றோடு ஒப்பிடும்போது, நம் தமிழகம் எந்த அளவுக்குப் பின்தங்கியிருக்கிறது என்பதை மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கிறது. கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா என அண்டை மாநிலங்கள் அனைத்துமே பயிற்று மொழிக் கொள்கையில் தத்தமது தாய்மொழிக்கு முதன்மை கொடுத்துவருவதைக் கண்ட பின்பும், இந்தியாவிலேயே மொழி உரிமைக்காக முதன்முதலாகப் போராடிய தமிழகத்தில், அதிகாரத்தில் இருப்போர் இதைப் பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை. அடிப்படைப் பிரச்சினையையே புரிந்துகொள்ளாத முதல்வரை வைத்துக்கொண்டு, ‘ஆபரேஷன் குபேரா’வுக்கு மட்டுமல்ல; தாய்மொழிவழிக் கல்விக்கும் நாம் ஆசைப்படவே முடியாதுதான்.

- பாலுச்சாமி, சென்னை.

அரசின் கடமை

நெ

ல்லையில் கந்துவட்டியால் தீக்குளித்த தொழிலாளி இசக்கிமுத்துவும் பரிதாபமாகப் பலியாகியுள்ள செய்தி நம்மை அதிர வைக்கிறது. ஏற்கெனவே மனைவி, இரு மகள்கள் இறந்த சோகம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இசக்கிமுத்துவும் பலியானது வேதனையிலும் வேதனை. கந்து வட்டிக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவது அரசின் உடனடிக் கடமை.

- கூத்தப்பாடி பழனி, தருமபுரி.

உள்கட்டமைப்பு யார் பொறுப்பு?

சி

ல அரசுப் பள்ளி ஆசிரியர்கள், குறிப்பாகப் பெண்கள், தங்கள் சொந்தப் பணத்தில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிவருவது போற்றத்தக்கது எனினும், ஏற்கத்தக்கதல்ல. பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதும், கற்பித்தல் உபகரணங்களை வாங்குவதும் பள்ளி நிர்வாகி என்ற முறையில் அரசின் கடமை. ஆசிரியர்கள், மாணவர் நலனுக்கு உதவ தம் பணத்தைப் பயன்படுத்துவதே உத்தமம். மாணவரை ஈர்க்க தனியார் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு போன்ற உத்திகள் தேவைப்படுகின்றன. அவை மாணவரது கற்றலையும், புரிதலையும் மேம்படுத்தியதாக எந்த ஆய்வும் தெரிவிக்கவில்லை. வகுப்பறைக் கற்பித்தலில் மாணவர் பங்கேற்பை உறுதிசெய்வதன் மூலமே அவர்களது அறிவு வளர்ச்சிக்கு வித்திட முடியும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x