Published : 24 Dec 2024 03:47 AM
Last Updated : 24 Dec 2024 03:47 AM
தமிழ்நாட்டில் 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும்வரை, தனி அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் நீண்ட காலத்துக்குத் தள்ளி வைக்கப்படுவது, அரசின் நலத்திட்டங்களைக் கடைக்கோடி மக்கள்வரைக்கும் கொண்டுசெல்வதற்கும் மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதற்கும் பெரும் தடையாக இருக்கும் என்கிற கவலை எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களுக்கு 2019இலும் புதிய மாவட்டங்களின் உருவாக்கம் காரணமாக மறுசீரமைப்புக்குள்ளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு 2021இலும் நடைபெற்றது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்-தலைவர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். 2019இல் பொறுப்பேற்றவர்களின் பதவிக்காலம் 2025 ஜனவரி 5இல் முடிவடைகிறது. அடுத்த தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் 45 நாள்களுக்கு முன்பே அறிவித்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் அறிவிப்போ, வாக்காளர் பட்டியலோ வெளியிடப்படவில்லை. இதையடுத்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை எனச் செய்திகள் வெளியாகின. உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மாற்றாகத் தனி அலுவலர்கள் நியமிக்கப்படலாம் எனக் கணிக்கப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...