Published : 21 Oct 2024 06:31 AM
Last Updated : 21 Oct 2024 06:31 AM

ப்ரீமியம்
வெள்ளம் வரும் முன் காப்பதே அரசின் கடமை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழையால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது பலரை நிம்மதியடையச் செய்திருக்கிறது. முந்தைய பேரிடர்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கும் அரசும் இந்த முறை மழை, வெள்ளத்தை எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதேவேளையில், இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு வெல்ல நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகம்.

வட கிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டாலே சென்னை மக்களை வெள்ளம் குறித்த அச்சம் சூழந்துகொள்கிறது. 2015 சென்னைப் பெருவெள்ளத்தைவிட 2023ஆம் ஆண்டில் 45% அதிகமாக மழை பொழிந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பே இந்த அச்சத்துக்குக் காரணம். இந்த ஆண்டு, மக்களைத் தங்கவைப்பதற்கான தற்காலிக முகாம்கள், சமதளப் பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றுவதற்கான மோட்டார்கள், வெள்ள நீரிலிருந்து மக்களை மீட்பதற்கான படகுகள், உணவு தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் எனப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x