Published : 27 Aug 2024 06:25 AM
Last Updated : 27 Aug 2024 06:25 AM
திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளது 67 ஆண்டு காலக் கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசிக் குடிநீர்த் திட்டத்தை, ஆகஸ்ட் 17 இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். விவசாயத்துக்கும் நிலத்தடி நீர் மேம்பாட்டுக்கும் உதவக்கூடிய இத்திட்டம் பல தடைகளை மீறி நிறைவேறியிருப்பது, மக்களைப் பெருமகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சுற்றிலும் உள்ள பகுதிகள் மேட்டு நிலத்தில் அமைந்திருப்பதால் வறட்சியை எதிர்கொள்பவை. காவிரியின் துணை ஆறான பவானி, நீலகிரியில் தோன்றி அத்திக்கடவு - பில்லூர் அணை - மேட்டுப்பாளையம் சிறுமுகை - பவானிசாகர் அணைக்கட்டு - கோபி செட்டிபாளையம் எனப் பயணித்து, இறுதியில் பவானி நகர்ப் பகுதியில் காவிரியில் கலக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT