Published : 02 Aug 2024 06:23 AM
Last Updated : 02 Aug 2024 06:23 AM

ப்ரீமியம்
சூழலியலாளர்களின் குரல்களுக்கு அரசுகள் செவிசாய்க்க வேண்டும்!

கேரளத்தின் வடகிழக்கு மாவட்டமான வயநாட்டில் ஜூலை 30 அதிகாலை நிகழ்ந்த நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இயற்கையைப் பாதுகாப்பதில் கோட்டைவிடும் ஆட்சியாளர்களின் மெத்தனத்தையும் இந்தக் கோர நிகழ்வு நமக்கு உணர்த்தியிருக்கிறது.

இயற்கைப் பேரிடர்களை அதிகம் எதிர்கொள்ளும் கேரளத்தில் 2018 வெள்ளத்துக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான பேரிடர் இது. மலைகள் நிறைந்த வயநாட்டில் இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து பெய்த கனமழை இந்த நிலச்சரிவுக்கு வழிவகுத்துவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x