Published : 03 Apr 2024 09:45 AM
Last Updated : 03 Apr 2024 09:45 AM

ப்ரீமியம்
உணவு விரயம்: களையப்பட வேண்டிய சமூக அநீதி!

உணவுப் பாதுகாப்பு என்கிற நிலையை உலகம் இன்னும் முழுமையாக எட்டியிருக்காத நிலையில், ஒவ்வோர் ஆண்டும் விரயமாக்கப்படும் உணவின் அளவு மிகுந்து வருவது வேதனையளிக்கிறது. குறிப்பாக, உலகெங்கும் 78 கோடிக் குழந்தைகள் பட்டினியில் வாடும் நிலைக்குத் தள்ளப்படலாம் என சர்வதேசத் தொண்டு நிறுவனமான ‘சேவ் தி சில்ரன்’ எச்சரித்திருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய தனிநபர் உணவு விரயத்தின் அளவைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது ஐ.நா. முன்மொழிந்துள்ள நிலைத்த வளர்ச்சி இலக்குகளில் (SDGs) ஒன்று. அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதையே ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள ‘உணவு விரயக் குறியீடு 2024’ ஆய்வறிக்கை காட்டுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x