Published : 23 Feb 2024 06:20 AM
Last Updated : 23 Feb 2024 06:20 AM
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், போர் முடிவதற்கான அறிகுறியே தென்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.
சோவியத் ஒன்றியம் தகர்ந்த பிறகு, தனி நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 2014இலிருந்தே மோதல்கள் நிகழ்ந்துவந்தன. அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதாலும் மேற்கத்திய நாடுகளின் ராணுவப் பாதுகாப்புக்கான நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயல்வதாலும் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறிவந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT