Last Updated : 01 Jun, 2023 06:15 AM

 

Published : 01 Jun 2023 06:15 AM
Last Updated : 01 Jun 2023 06:15 AM

ப்ரீமியம்
ஆவின்: செய்ததும் செய்ய வேண்டியதும் | பால் அரசியலும் விளைவுகளும்

குஜராத் மாநில அரசின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான அமுல், தமிழ்நாட்டில் பால் பொருள்கள் விற்பனையையும் தாண்டி பால் கொள்முதலில் இறங்க விருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இதில் பாஜகஅரசியல்ரீதியாக எதிர்பார்க்கும் லாபம்என்ன எனத் தெரியவில்லை. ஆனால், கர்நாடகத்தில் இது போன்ற முயற்சிகள், சமீபத்திய தேர்தலில் அக்கட்சிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை நினைவுகூர்வது அவசியம்.

சலனம் ஏற்படுத்திய அறிவிப்புகள்: கடந்த மார்ச் மாதம், தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் ‘தஹி’ எனக் குறிப்பிட வேண்டும் என இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையம் பிறப்பித்த உத்தரவு, தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நேரம் என்பதால், காங்கிரஸ் அதைக் கையிலெடுத்துக் களமாடியது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே அமுல் விவகாரம் தலைதூக்கியது. அதாவது ஏற்கெனவே, புகைந்துகொண்டிருந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x