Published : 14 May 2023 08:42 AM
Last Updated : 14 May 2023 08:42 AM
கேரளப் பண்பாட்டில் கலந்திருக்கும் தமிழ் அடையாளங்களை இன்றும் தேட முடியும். முக்கியமாக கேரள நாட்டார் கலைகளின் பின்னணியாக உள்ளே சில இசைக் கருவிகளும் நெறிப்படுத்தப்பட்ட கலைகளின் பின்னணியாக உள்ள இசைக் கருவிகள் சிலவும் தமிழ் மண்ணுக்கு உரிமை உடையவை என்றும் இவை பண்டைய கேரளத்தில் வழக்கில் இருந்தவை என்றும் கூற முடியும்.
தமிழகத்தின் ஒரு பகுதியாக இன்றைய கேரளப் பகுதி இருந்த காலகட்டத்தில் வழக்கில் இருந்த இசைக்கருவிகள் இன்றும் அங்குப் புழக்கத்தில் உள்ளன. இவை ஆரம்ப காலத் தமிழகத்திற்கு உரியவை என்கிறார் கேரள இசைக் கருவிகளை விரிவாக ஆராய்ந்த அறிஞர் எல்.எஸ்.ராஜகோபாலன் (சான்று: Temple Musical Instruements of Kerala, 2010). இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சேர நாட்டு இலக்கியமான சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட இசைக்கருவிகள் இன்றும் கேரளத்தில் வழக்கில் உள்ளன. இப்போதும் கேரளத்தில் வழக்கில் உள்ள இடக்கா, மத்தளம், உடுக்கை, திமிலை, மிளவு, பறை, துடி ஆகியன சில உதாரணங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT