Published : 10 May 2023 06:18 AM
Last Updated : 10 May 2023 06:18 AM
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக, டெல்லியின் ஜந்தர் மந்தரில் இரண்டு வாரங்களுக்கு மேலாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 18 வயது நிறைவடையாத வீராங்கனை உள்பட ஏழு மல்யுத்த வீராங்கனைகள் அவர்மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வீராங்கனைகள் சில மாதங்களுக்கு முன்னர் போராடிய நிலையில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. போஷ் சட்டம் (POSH - Prevention of Sexual Harassment at the Workplace Act) வலியுறுத்தும் ‘உள்ளுறைப் புகார்க் குழு’ (ICC) என்கிற அமைப்பே இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பில் இல்லை என்பது அந்த விசாரணை குழுவின் மூலம் தெரியவந்தது. இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT