Published : 23 Apr 2023 07:11 AM
Last Updated : 23 Apr 2023 07:11 AM

ப்ரீமியம்
ஏப்ரல் 24: ஜெயகாந்தனின் 89ஆம் பிறந்தநாள் | ‘தோழமை என்று அவர் சொல்லிய சொல்.. ஒரு சொல் அன்றோ...’

இந்தியாவின் முதல் குடிநபருடன் மட்டுமல்ல; எதற்கும் ஆகாதவர்கள், விளங்காதவர்கள் என ஒதுக்கப்பட்ட கடைக்கோடி மக்களோடும் தோழமையோடு பழகியவர் ஜெயகாந்தன். அவரோடு நான் மிக நெருங்கிப் பழகிய காலத்தில், எப்போதும் கூடவே அவருக்கு உதவியென இருந்தவர்கள் ஆறுமுகம், பன்னீர் என்ற இரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள். அவர்கள் தவிர, ஊரிலும் தெருவிலும் வீட்டிலும் ‘இது உருப்படாது’ என்று பெயரெடுத்துப் புகழ்பெற்றிருந்த திப்பு சுல்தான் என்கிற சையத் சாலியா உஸ்மானும் கூட இருந்தார். திப்பு இப்போது எப்படி இருக்கிறார் என்று கடைசியில் சொல்கிறேன். இது தவிர கட்டிடத் தொழிலாளர்கள், எலெக்ட்ரீஷியன்கள், பெயின்ட்டிங் வேலை செய்பவர், சினிமாவில் அடித்தட்டு வேலை செய்பவர்கள், கஞ்சா விற்பவர்கள், சிறைக் கைதி, மூட்டை தூக்குபவர் என்று பலதரப்பட்ட நண்பர்கள் அவருக்கு இருந்தனர். இதில் முக்கியமான விஷயம், இவர்களில் ஓரிருவர் தவிர வேறு யாரும் அவருடைய வாசகர்கள் அல்லர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x