Published : 19 Apr 2023 06:16 AM
Last Updated : 19 Apr 2023 06:16 AM
இந்தியாவின் ‘புதிய விண்வெளிக் கொள்கை 2023’க்கு பாதுகாப்பு அமைச்சரவைக் குழு ஏப்ரல் 6 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. ‘இந்திய விண்வெளிக் கொள்கை 2023’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் புதிய கொள்கையானது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL), இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) ஆகிய அமைப்புகளின் பணிகளையும் பொறுப்புகளையும் வரையறுக்கிறது. மேலும், இந்திய விண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பை அனுமதிப்பது குறித்தும் பேசுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்சி: 1961இல், அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு விண்வெளி ஆராய்ச்சிக்கும் பயன்பாட்டுக்குமான பொறுப்பை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபாவின் தலைமையில் இயங்கிவந்த அணுசக்தித் துறையிடம் ஒப்படைத்தது; இதைத் தொடர்ந்து தேசிய விண்வெளித் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக, டாக்டர் விக்ரம் சாராபாயைத் தலைவராகக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய ஆணையம் 1962இல் அமைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT