Published : 26 Dec 2022 06:47 AM
Last Updated : 26 Dec 2022 06:47 AM

ப்ரீமியம்
கற்றதும் பெற்றதும் 2022 | பெண்கள்: பெருமிதமும் போராட்டமும்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத சூழலிலும், உலகின் பெரிய ஜனநாயக நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்கிற பெருமிதத்தோடு பெண்களை அணுகிவருகிறோம்.

பெண்கள் எதை உடுத்த வேண்டும் என்பது 2022இலும்கூடப் பற்றி எரிகிற பிரச்சினையாக இருக்கிறது. கர்நாடக மாநிலப் பள்ளி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை, நாடு முழுவதும் விவாதப் பொருளானது. ஹிஜாப் அணிந்தவர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படாத அவலமும் அரங்கேறியது. ஈரானில் மாஷா அமினி என்கிற இளம்பெண், முறையாக ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்டுக் காவலர்களால் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொடூரத்தைக் கண்டு பொங்கியெழுந்த ஈரானியப் பெண்கள், ஹிஜாப்பை எரித்தும் தங்கள் தலைமுடியைக் கத்தரித்தும் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x