Published : 25 Dec 2022 09:53 AM
Last Updated : 25 Dec 2022 09:53 AM
அண்மைக்கால கரோனா சூழலில் அதிகம் பாதிக்கப்பட்டவற்றில் நாடகச் செயல்பாடுகளும் ஒன்று. நாடகம் போன்ற நிகழ்த்துவடிவங்கள் நேரடியான கூட்டுச் செயல்பாடுகளை அதிகம் சார்ந்திருக்கும் நிலையில் இத்தகைய முடக்கம் ஒருவிதக் கையறு நிலையையும் தளர்ச்சியையுமே உருவாக்கியது. கடந்த வருட இறுதியில் கரோனா பாதிப்புகளின் கடுமை குறைந்து, இயல்பு நிலை திரும்பத் தொடங்கிய பிறகே நாடகச் செயல்பாடுகள் தலைதூக்க ஆரம்பித்தன.
எல்லா கலாச்சாரங்களிலும் நாடகத்துக்கு ஒரு தனித்த இடம் இருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வடிவங்களும், செயல்பாடுகளும் மாற்றமடைந்து வருகின்றன. சினிமா, டிவி, வீடியோ போன்ற காட்சி ஊடகங்கள் இன்று அதிக ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், நாடகம் என்கிற கலை வடிவத்தின் நேரடி அனுபவத்தைப் பெற விரும்பும் ஒரு சிறு குழுவினரே இன்று நாடகத்தை நாடிவரும் நிலை உள்ளது. ஆனால், இன்றைய சமூக ஊடகங்களின் பாதிப்பில் கல்லூரி வளாகங்களிலும் இளைஞர்கள் கூடுமிடங்களிலும் தங்கள் சமூக அரசியல் எதிர்வினைகளை வெளிப்படுத்தக் குறுநாடக வடிவங்களை மாணவர்களும் இளைஞர்களும் கையாளும் நிலை உள்ளது. பெண்ணிய அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்கள் எதிர்ப்புக் குரல்களை வெளிப்படுத்த நாடக வடிவங்களைக் கையிலெடுக்கின்றனர். உலகமயமாக்கல் தனிமையில் உழலும் தனிமனிதர்களைச் சமூகமயப்படுத்தும் பணிகளை நாடக வடிவங்களால்தான் செய்ய இயலும். அதனால்தான் எவ்வளவு கலாச்சாரத் தாக்குதல்களுக்கிடையிலும் உலகம் முழுவதும் நாடகம் தன்னுடைய மதிப்பையும் பயன்பாட்டையும் இழக்காமல் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT