Published : 02 Jul 2014 08:16 AM
Last Updated : 02 Jul 2014 08:16 AM
ஜனவரி 4:
மெசபடோமியா பகுதியில் துருக்கியப் படைகளின் முற்றுகையில் திணறிக்கொண்டிருந்த பிரிட்டன் படைகள், ஷேக் சாத் சண்டையில் புது பலத்துடன் போரிட்டன. இறுதியில் துருக்கிப் படையினர் பின்வாங்கினர்.
பிப்ரவரி 21:
பிரான்ஸின் மோர்ட்- ஹோம் ரிட்ஜ் பகுதி மீது ஜெர்மனிப் படைகள் கொடூரத் தாக்கு தலைத் தொடங்கினர். 10 மாதங்களுக்கும் மேல் நீடித்த இந்தச் சண்டையில் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
மார்ச் 9:
பிரிட்டனின் வேண்டுகோளுக்கு இணங்க, தமது நாட்டின் துறைமுகத்துக்கு வந்த ஜெர்மனி கப்பல்களைப் பறிமுதல்செய்தது போர்ச்சுகல். கோபமடைந்த ஜெர்மனி, போர்ச்சுக்கல் மீது போர் அறிவித்தது.
ஏப்ரல் 5:
பாக்தாத் நகரின் அருகில் டைகிரிஸ் ஆற்றின் கரையில் உள்ள குட் பகுதியில் நடந்த போரில், துருக்கியப் படையினரை எதிர்த்து மூன்றாவது சண்டையில் நேச நாடுகள் இறங்கின.
ஏப்ரல் 29:
குட் பகுதியில் இருந்த 3,000 பிரிட்டன் மற்றும் 6,000 இந்திய வீரர்கள் துருக்கிப் படையிடம் சரணடைந்தனர். இவர்களில் பலர் பசி மற்றும் நோயால் சிறையிலேயே இறந்தனர்.
மே 31 - ஜூன் 1:
டென்மார்க் நகரின் ஜாட்லண்ட் பகுதியில் ஜெர்மன் போர்க் கப்பல்களுக்கும் பிரிட்டனின் போர்க் கப்பல்களுக்கும் இடையில் உக்கிரமான சண்டை நடந்தது.
ஆகஸ்ட் 28:
ஜெர்மனி மீது போர்ப் பிரகடனம் செய்தது இத்தாலி.
செப்டம்பர் 2:
முதன்முறையாக ஜெர்மனியின் ஜிப்லின் விமானம் ஒன்று பிரிட்டன் விமானப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
டிசம்பர் 12:
சமாதானமாகப் போகலாம் என்று நேச நாடுகளுக்குத் தூது அனுப்பியது ஜெர்மனி.
டிசம்பர் 18:
பிரான்ஸின் வெர்டன் நகரில் நடந்த சண்டை முடிவுக்கு வந்தது. மேற்கு ஐரோப்பியப் போர் முனையில் நடந்த மிக நீண்ட மற்றும் அதிக பொருட்செலவான சண்டை இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT