Published : 27 Dec 2016 10:29 AM
Last Updated : 27 Dec 2016 10:29 AM

கிறிஸ்துவைப் போலக் கிடந்த ரஷ்யத் தூதர்

'தி இந்து' ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த புகைப்படத்துடனான செய்தி, மர்மமான உணர்வுகளை எனக்கு சில நாட்களாக எழுப்பிக்கொண்டிருக்கிறது. செய்தியாகப் பார்த்தால், அது நாம் கழிக்கும் வாழ்க்கையின் ஓர் அங்கம்தான். துருக்கியின் அங்காரா நகரத்தில், துருக்கி நாட்டுக்கான ரஷ்யத் தூதர் ஆண்ட்ரே கார்லோவ், ஒரு ஓவியக் கண்காட்சிக் கூடத்தில் புகைப்படக் கண்காட்சி துவக்க விழாவுக்கு வந்திருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதே அந்தச் செய்தி.

முதுகில் சுடப்பட்ட அவர், ஒரு நாடகத்தின் ஒத்திகையைப் போலக் கைகளைச் சிலுவைபோல நீட்டி, வானத்தைப் பார்த்தபடி இறந்து கிடந்த புகைப்படம்தான் என்னிடம் இன்றுவரை பிரத் யேகமான உணர்ச்சிகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அந்த நிகழ்ச்சியைப் புகைப்படமெடுத்த பர்ஹான் ஓஸ்பிலிசியும், அந்த துப்பாக் கிச்சூட்டையும், அவர் விழுந்து இறந்த விதத்தையும், அந்தப் புகைப்படக் கண்காட்சியின் ஒரு நாடக அங்கமாகத்தான் முதலில் உணர்ந்திருக்கிறார். பின்னர்தான் நடந்தது ஒரு கொலையென்றும், சில நிமிடங்கள் முன்னால் உயிருடன் பார்த்த ஒரு நபர் கண் முன்னர் இல்லையென்பதையும் அவர் அதிர்ச்சியுடன் உணர்ந்துள்ளார்.

"நான் ஒவ்வொரு குண்டு சத்தத் தையும் கேட்டேன். பம் பம் பம்மென்று பேரிரைச்சல்'' என்று நினைவுகூரும் பர்ஹான், தொடர்ந்து புகைப்படங்களையும் எடுத்திருக்கிறார். அந்தச் சமயத்தில், அதுதான் தன் கடமை என்று உணர்ந்த தாகவும் கூறுகிறார்.

பர்ஹான் ஓஸ்பிலிசி, அன்று தனது வீட்டுக்கு அலுவலகத்திலிருந்து சீக்கிரம் திரும்புவதற்கே நினைத்திருந்தார். ஆனால், ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் கடந்த சில வாரங்களாக மோசமாகிவரும் நிலையில், ரஷ்யத் தூதரின் பேச்சை விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே வந்திருக்கிறார்.

ஆண்ட்ரே கார்லவ் பேசும்போது, பார்வையாளரைப் போல அவர் பின்னர் நின்றுகொண்டிருந்த கொலையாளி சுடும்போது, "அலெப்போவை மறக்கவே கூடாது… சிரியாவையும் மறக்கவே கூடாது" என்று கூறியபடி சுட்டிருக்கிறார்.

வானத்தைப் பார்த்தபடி, கைகளை விரித்து இறந்து கிடந்த ரஷ்யத் தூதர் ஆண்ட்ரே கார்லவின் உடலிலிருந்து ரத்தம் தரையில் வடிந்து பரவியிருக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x