Published : 30 Oct 2022 07:14 AM
Last Updated : 30 Oct 2022 07:14 AM

ப்ரீமியம்
அஞ்சலி: பா.செயப்பிரகாசம் | என் ஆசிரியர் பா.செயப்பிரகாசம்

பெருமாள் முருகன்

தோழர் பா.செயப்பிரகாசத்தை 1988இன் இறுதியில் சந்தித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்திருந்த காலம். அப்போது அறிமுகமான ‘மனஓசை’ இதழுக்குச் சிலவற்றை எழுதியனுப்பினேன். அதன்வழியாகப் பாசெவைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. ‘மனஓசை’ இதழின் பொறுப்பாசிரியர் அவர். அச்சில் அவர் பெயர் இருக்காது. மார்க்சிய லெனினிய இயக்கம் ஒன்றின் கலை இலக்கிய இதழ் என்பதாலும் பாசெ அரசு ஊழியர் என்பதாலும் பெயர் இடம்பெறவில்லை.

‘ஒரு ஜெருசலேம்’, ‘காடு’, ‘கிராமத்து ராத்திரிகள்' ஆகிய அவரது சிறுகதைத் தொகுப்புகளை வாசித்திருந்த பிரமிப்பு எனக்குள் இருந்தது. அப்பேர்ப்பட்ட எழுத்தாளர் பொறுப்பு வகிக்கும் இதழ், அவர் இணைந்து இயங்கும் அமைப்பு ஆகிய காரணங்களால் மார்க்சிய அறிவு ஏதும் இல்லாமலே அவ்வமைப்பில் ஐக்கியமானேன். அப்போது ‘மனஓசை’ இதழ் ஆசிரியர் குழுவில் நால்வர் இருந்தனர். மாநில அரசுத் துறையில் பாசெ உயரதிகாரியாக இருந்தார். அலுவலக வேலைகள் கூடுதல். அமைப்புப் பேச்சாளராகக் கூட்டங்களுக்குச் செல்லும் பணி. அவற்றுக்கிடையே ‘மனஓசை’ பொறுப்பு. ‘சூரியதீபன்’ என்கிற பெயரிலும் வேறு பல புனைபெயர்களிலும் ‘மனஓசை’ இதழில் எழுதுவார். இதழ்ப் பணிக்குக் கூடுதலாக இன்னொருவர் தேவைப்பட்டதால், அதற்குப் பொருத்தமானவன் என்று என்னை அவர்கள் உணர்ந்ததால் அறிமுகமான சில மாதங்களிலேயே ஆசிரியர் குழுவில் இணைந்தேன். 1989 முதல் 1991இல் இதழ் நிற்கும் வரை ஆசிரியர் குழுவில் செயல்பட்ட அந்த மூன்றாண்டுகள் என் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x