Last Updated : 03 Jun, 2014 09:00 AM

 

Published : 03 Jun 2014 09:00 AM
Last Updated : 03 Jun 2014 09:00 AM

ஜூன் 3, 1889- முதன்முதலில் மின்சாரம் அதிக தூரம் எடுத்துச்செல்லப்பட்ட நாள்

மின்சாரம் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். மின்சாரத்துக்கு முந்தைய உலகம் இரவில் ஒரு இருட்டு கோட்டைதான். எனினும், மின்சாரம்குறித்து ஒருசிலர் உணர்ந்திருந்தனர். கிரேக்க நாட்டு புராணங்களில் மின்சார மீன் பற்றிய தகவல்கள் உள்ளன. அந்த மீனைத் தொட்டால் ஏற்படும் மின் அதிர்ச்சி பற்றி இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பாகவே மனிதர்கள் பதிவுசெய்துள்ளார்கள். மின்சாரம் பற்றிய விவாதமும் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. ஆனால், 18,19-ம் நூற்றாண்டுகளில்தான் அதைப் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி தொடங்கியது. 1831-ல் மைக்கேல் ஃபாரடே மின்சாரத்தைக் கண்டுபிடித்தார். அவரது விதிகளின்படிதான் இன்றும் மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.

ஒரு கம்பியில் நிகழும் மின்னணுக்களின் ஓட்டத்தால் மின்சாரம் உருவாகிறது. மின்னணுக்களின் ஓட்டமே (மின்சாரமே) மின்னலுக்குக் காரணம். மின்சாரம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அந்தச் சுருள் மின்காந்த சக்தியைப் பெறுகிறது. அனல், அணு, நீர் என பல ஆதாரங்களிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி ஆகிறது.

உற்பத்தியான மின்சாரத்தைப் பல இடங்களுக்கு எடுத்துச்சென்று விநியோகம் செய்வது தனி அறிவியல். மின்விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவில் ஒரு தெருவில் தெரு

விளக்குகளை எரிய வைத்தும் காட்டினார். பிறகு நீண்ட தூரம் மின்சாரம் எடுத்துச் செல்லப்பட்டது 1889-ம் ஆண்டு இதே நாளில்தான். அமெரிக் காவின் வில்லாமிட்டி அருவியில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் உள்ள ஓரகன் என்னுமிடத்தில் போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவைக்கப்பட்டன.

இன்று நாடுகளுக்கு இடையேயும் கண்டங் களுக்கு இடையேயும் மின்சார விநியோகம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. கம்பியில்லாமலும் கைபேசிக்கு மின்னேற்றம் (சார்ஜ்) செய்து கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்புகள் ஒரு புதிய அறிவியல் யுகத்தை முன்னறிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x