Last Updated : 13 Jun, 2014 09:00 AM

 

Published : 13 Jun 2014 09:00 AM
Last Updated : 13 Jun 2014 09:00 AM

கால்பந்தே கடவுளடா!

கால்பந்து போட்டிகளைப் பொறுத்த அளவில் உள்நாட்டில் மட்டும் அல்ல; வெளிநாடுகளிலும் அமோக ஆதரவைப் பெற்ற அணி பிரேசில்தான். கால்பந்தை, பித்துப்பிடித்தாற்போல் கொண்டாடும் பிரேசிலியர்களின் அணியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே.

கடந்து வந்த பாதை

1930 உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஆரம்பம். முதல் போட்டியில் யூகோஸ்லோவியாவுக்கு எதிராக பிரேசில் அணிக்காக முதல் உலகக்கோப்பை கோலைப் போட்டவர் ப்ரீகினோ. அந்த ஆட்டத்தில் பிரேசில் தோற்றது.

1934 முதல் சுற்றிலேயே பிரேசில் வெளியேறியது.

1938 பிரேசில் அணியில் அதிக கோல் போட்டவர் லியோனிடாஸ். மொத்தம் 7. பிரேசில் மூன்றாவது இடம்பிடித்தது.

1950 பிரேசிலில் போட்டி நடந்தது. ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடந்தது. இறுதிச் சுற்றில் உருகுவே, பிரேசிலை வென்றது 2-1.

1954 காலிறுதிச் சுற்றில் ஹங்கேரியுடனான ஆட்டத்தில் தோற்று வெளியேறியது பிரேசில். மோசமான முரட்டு ஆட்டம் அது.

1958 ஸ்வீடனில் நடந்த போட்டியில் பிரேசில் முதல்முறையாக உலக சாம்பியன் ஆனது. 17 வயது பீலே உத்வேகமாகத் திகழ்ந்தார்.

1962 பீலே காயமடைந்ததால் கரீன்சா தலைமையில் பிரேசில் மீண்டும் சாம்பியனானது.

1966 குழுக்களுக்கு இடையிலான போட்டியிலேயே தோற்று வெளியேறியது.

1970 பீலே, டோஸ்டாவ், ஜைர்ஜினோ, கார்லோஸ் ஆல்பர்டோ, ரிவைலினோ என்று அசகாய சூரர்களுடன் வலுவேறிய பிரேசில் இறுதிச் சுற்றில் இத்தாலியை வீழ்த்தி சாம்பியனானது. ஜூல்ஸ் ரிமெட் கோப்பையைத் தக்க வைத்துக்கொண்டது.

1974 அரையிறுதியில் நெதர்லாந்திடம் (ஹாலந்து) தோற்று நாலாவது இடத்துக்குச் சென்றது.

1978 கோல் வித்தியாசம் காரணமாக இறுதிச் சுற்றைத் தவறவிட்டு 3-வது இடத்தைப் பிடித்தது. அர்ஜெண்டினா சாம்பியன்.

1982 1970-ல் தோற்றதற்குப் பழிதீர்த்துக்கொண்டது இத்தாலி.

1986 காலிறுதிச் சுற்றில் பிரான்ஸுக்கு எதிரான பெனால்டி வாய்ப்பை சாக்ரடீஸ் தவறவிட்டதால் தோற்று வெளியேற நேரிட்டது.

1990 சுமாரான திறமையுள்ள ஆட்டக்காரர்களே இருந்ததால், அர்ஜெண்டினா விடம் தோற்று வெளியேற நேர்ந்தது.

1998 நிச்சயம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் இறுதிச் சுற்றில் பிரான்ஸிடம் தோற்றுப் பட்டத்தை இழந்தனர். ரொனால்டோவுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு முக்கியக் காரணம்.

2002 ரொனால்டோ, ரிவால்டோ, ரொனால்டினோவின் துடிப்பான ஆட்டத்தால் சாம்பியன் பட்டம் கிடைத்தது. ஜெர்மனிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வென்றது. ரொனால்டோவுக்கு தங்க பூட்ஸ்கள் பரிசாகக் கிடைத்தன.

2006 வயதான ஆட்டக்காரர்களைக் கொண்டதால் காலிறுதிச் சுற்றிலேயே பிரேசில் தோற்றது.

2010 காலிறுதிச் சுற்றில் மீண்டும் தோற்றது பிரேசில்.

2014 விபத்துகள், கெடு தவறிய கட்டுமானங்கள் என்ற தடங்கல்களுக்கு இடையில் ஆறாவது முறையாக உலக சாம்பியன் கோப்பையைப் பெற்றுவிட முடியும் என்று பிரேசில் நம்பிக்கையுடன் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x