Published : 16 Jun 2014 10:00 AM
Last Updated : 16 Jun 2014 10:00 AM
பூடானில் புகையிலை உற்பத்தி செய்வது, வியாபாரம் செய்வது உள்ளிட்ட அனைத்துக்கும் ஒட்டுமொத்தத் தடை விதிக்கப்பட்ட நாள் இன்று. அந்நாட்டில் சட்டப்படியாகத் தனிநபர்கள் சிறிதளவு புகையிலையை வரிசெலுத்தி வைத்துக்கொள்ளலாம் என்று அனுமதி இருந்தது. எனினும், வரிசெலுத்திப் புகையிலை வைத்திருந்தவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால், புகையிலை உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக அந்நாட்டில் சர்ச்சை எழுந்தது. அதன் விளைவாக, 2010-ல் புகையிலை ஒழிப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, புகையிலை உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதிக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு புகையிலைக்குத் தடைவிதித்த முதல் நாடு பூடான்தான்.
2004-லேயே அந்நாட்டில் புகையிலைக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதேசமயம், புகையிலை இறக்குமதி அனுமதிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பலமடங்கு வரி விதிக்கப்பட்டது. 2005-ல் பொது இடங்களில் புகைபிடிப்பதற்கும் தடைவிதிக்கப் பட்டது. இந்நிலையில், 2010-ல் விதிக்கப்பட்ட முழுமையான தடையால், புகையிலை விற்பனை செய்த பலர் கைதுசெய்யப்பட்டனர். புகை யிலைப் பொருள் வைத்திருந்ததாக புத்தபிட்சு ஒருவர் கைது செய்யப்பட்டது பூடானில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. புகையிலைக்குத் தடை விதிக்கப்பட்டதால், கள்ளச் சந்தையில் புகையிலை விற்பனை அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், தற்போது புகையிலைப் பொருட் களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கலாமா என்ற யோசனையில் பூடான் அரசு உள்ளது. சமீபத்தில், மது பான இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாடு விலக்கிக்கொண்டது குறிப்பிடத் தக்கது.
மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவது 1958-ல்தான் அங்கே தடைசெய்யப்பட்டது. யாரும் தொலைக்காட்சி வைத்துக்கொள்ளக் கூடாது. இணையம் பயன்படுத்தக் கூடாது என 1999-ம் ஆண்டு வரை தடை இருந்தது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT