Published : 13 Jun 2014 10:06 AM
Last Updated : 13 Jun 2014 10:06 AM
உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் உலகப் போரில் பங்கேற்கும் துணிவுடன் களமிறங்குகின்றன. அணியின் வீரர்களையும் நாட்டு மக்களையும் உத்வேகம் கொள்ளச் செய்யும் வாசகங்களை அனைத்து அணிகளும் பயன்படுத்துகின்றன. வெற்றி நமதே என்ற பெரும் நம்பிக்கையில் மைதானத்துக்குள் புகம் வீரர்களின் மனதில் பதிந்திருக்கும் சில வெற்றி வாசகங்கள்:
அல்ஜீரியா- பிரேசிலில் பாலைவன வீரர்கள்
அர்ஜெண்டினா- நாங்கள் வெறும் அணி அல்ல, நாடு!
ஆஸ்திரேலியா- வரலாற்றில் ஒரு இடம் தேடி!
பெல்ஜியம்- அசாத்தியங்களை எதிர்பாருங்கள்
போஸ்னியா & ஹெர்செகோவினா- மற்றும் மனதால் டிராகன், மைதானத்திலும் டிராகன்
பிரேசில்- தயாராக இருங்கள், ஆறாவது (முறை) கோப்பையை அள்ளப்போகிறோம்!
கேமரூன்- சிங்கம் சிங்கமாத் தான் வரும்!
சிலி- சி..சி..சி..லே..லே..லே! முன்னேறு சிலி!
சொலம்பியா- பயணிப்பது நாடு, ஒரு அணி அல்ல!
கோஸ்டாரிகா- கால்பந்தே எனது காதல்! மக்கள்தான் என் உயிர்!
குரோஷியா- பற்றி எரியும் இதயம்! குரோஷியாவுக்கு எல்லாம் ஒன்றே!
ஈக்குவடார்- ஒரு லட்சியம், ஒரு உத்வேகம், ஒரே ஒரு இதயம்!
பிரிட்டன்- ஒரு அணியின் கனவு, கோடிக்கணக்கானோரின் இதயத்துடிப்பு!
ஃப்ரான்ஸ்- முடியாது என்ற சொல் ஃப்ரெஞ்சு மொழியில் கிடையாது!
ஜெர்மனி- ஒரு நாடு, ஒரு அணி, ஒரே கனவு!
கானா- பிரேசிலை ஒளிரவைக்கும் கருப்பு நட்சத்திரங்கள்
கிரீஸ்- வீரர்கள் விளையாடுவது கிரேக்க ஸ்டைலில்தான்!
ஹோண்டுராஸ்- நாம் ஒரு நாடு, ஒரு தேசியம், மனதில் ஐந்து நட்சத்திரங்கள்
இரான்- பாரசீகத்தின் கெளரவம்
இத்தாலி- நீலக் கனவின் நிறமாக்குவோம் உலகக்கோப்பையை!
ஐவரி கோஸ்ட்- பிரேசிலின் திசையில் அணிவகுக்கும் யானைகள்!
ஜப்பான்- வீரனே, போர் புரியும் தருணம் வந்து விட்டது!
மெக்சிகோ- என்றும் ஒற்றுமை, என்றும் அஸ்டிகாஸ்!
நெதர்லாந்து- ஆண்மகன் அணிவது ஆரஞ்சு நிறம்!
நைஜீரியா- ஒற்றுமையால் வெல்வோம்!
போர்ச்சுகல்- கடந்தகாலம் என்பது வரலாறு, எதிர்காலம் என்பது வெற்றி!
ரஷ்யா- ஒருவராலும் நம்மைப் பிடிக்கமுடியாது!
தென் கொரியா- சிவப்பே, கொண்டாடு!
ஸ்பெயின்- இதயம் முழுதும் வெற்றிக்கான தாகம்!
சுவிட்சர்லாந்து- கடைசி நிறுத்தம்: 07-13-14 மரகானா
உருகுவே- முப்பது லட்சம் கனவு, முன்னேறு உருகுவே!
அமெரிக்கா- அணியாய் ஒன்றுபட்டோம், செயலால் உந்தப்பட்டோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT