Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM
பபாசி இணையதளத்தில் (bapasi.com) நுழைவுச்சீட்டு வாங்கிக்கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பது, முகக்கவசம் அளிப்பது, சானிடைசர் வழங்குவது என கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாலை வேளையிலும் தமிழகத்தின் முக்கியமான பேச்சாளர்களும் இசைக் கலைஞர்களும் செவிக்கு விருந்தளிக்கக் காத்திருக்கிறார்கள்.
‘கதைசொல்லி’ நிகழ்வு வழியாக ஒவ்வொரு மாலையிலும் குழந்தைகள் கதை சொல்கிறார்கள். குழந்தைகளின் கதை சொல்லும் திறமையை மெருகேற்ற தமிழகத்தின் முக்கியமான கதைசொல்லிகளும் கலந்துகொள்கிறார்கள்.
உலகப் பெண்கள் தினமான மார்ச் 8 அன்று பெண்களுக்காக ஒரு சிறப்புக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாசகர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள விரும்பினால், ஓய்வு அறைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எழுத்தாளர்களைக் கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கென சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனுமதிக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் புத்தகக்காட்சியைக் கண்டுகளிக்கலாம்.
இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள். 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கார்டு ஸ்வைப்பிங் செய்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.
மாற்றுத்திறனாளிகள் அரங்குகளுக்குச் செல்ல சக்கர நாற்காலிகள் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளன.
108 ஆம்புலன்ஸ் ஒன்றும், மருத்துவக் குழுவினரும்தயாராக இருப்பார்கள்.
ரூ.100-க்கு சீசன் டிக்கெட் வாங்கினால், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரோ அல்லது நண்பர்கள் நான்கு பேரோ எப்போது வேண்டுமானாலும் வந்துசெல்லலாம்.
நந்தனம் பிரதான சாலையிலிருந்து புத்தகக்காட்சிக்குள் வருவதற்காக வாகன வசதி உள்ளது. நடக்கச் சிரமப்படுபவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT