Last Updated : 18 Jun, 2014 08:00 AM

 

Published : 18 Jun 2014 08:00 AM
Last Updated : 18 Jun 2014 08:00 AM

ஜூன் 18, 1981- எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்ட நாள்

நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கு மான மருத்துவ மையம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான் சிஸ்கோ நகரில் உள்ளது. இங்குதான் 1981-ல், அதுவரை இல்லாத ஒரு புதுவகையான நோயின் பாதிப்பு உலகில் பரவுகிறது என்று கண்டறியப்பட்டது. அந்த நோயின் பெயர் எய்ட்ஸ்.

1959-ல் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் ஒருவரும், ஹைதி நாட்டிலிருந்து அமெரிக்கா வந்த ஒருவரும் புரிந்துகொள்ள முடியாத வகையில் மரணமடைந்தனர். அவர்களின் நோய்த் தடுப்பாற்றல் ஏன் வேலை செய்யவில்லை என்பது புரியாமல் மருத்துவர்கள் திகைத்தனர்.

இதற்கிடையே, போதை மருந்து பயன்படுத்துபவர் களுக்கும் தன்பாலின ஈர்ப்பு உள்ள ஆண்களுக்கும் அதிக எண்ணிக்கையில் தோல் புற்றுநோய் வருவதை அமெரிக்காவின் மருத்துவ மையம் கண்டறிந்தது. 4எச் நோய் என்று முதலில் அதற்குப் பெயர் வைத்தனர். ஹைதி நாட்டினர், ஹோமோ செக்சுவல்ஸ் எனப்படும் தன்பாலின ஈர்ப்புள்ள ஆண்கள், ஹெராயின் போதைப் பழக்கம் உள்ளவர்கள் மற்றும் ரத்தம் உறையாத பாதிப்புள்ளவர்களுக்கு (ஹீமோஃபிலியாக்ஸ்) வரக்கூடிய நோய் என்று கருதி அந்தப் பெயர் வைக்கப்பட்டது.

1981-ம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 121 பேர் இந்த நோயால் இறந்தனர். இதையடுத்து மருத்துவ ஆராய்ச்சி தீவிரமடைந்தது. 1983-ல் எய்ட்ஸ் கிருமி தனிமைப்படுத்திப் பிரித்து எடுக்கப்பட்டது. 1986-ல் அதற்கு எச்.ஐ.வி. (HIV) எனப் பெயர் வைக்கப்பட்டது.

மனிதர்களின் மரபணுக்களை வைத்துச் செய்யப் பட்ட ஆராய்ச்சியின்படி,19-ம் நூற்றாண்டின் பிற் பகுதியிலோ 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு - மத்திய ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி. கிருமி தோன்றியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

இதுவரை 3 கோடிப் பேருக்கும் மேல் அந்த நோயால் இறந்துள்ளனர். 2010-ன் தோராயமான கணக்குப்படி 3 கோடியே 40 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்போடு வாழ்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x