Last Updated : 29 May, 2014 07:00 AM

 

Published : 29 May 2014 07:00 AM
Last Updated : 29 May 2014 07:00 AM

மே 29, 2004- வாட்டர்கேட் வழக்கில் நிக்சனால் நீக்கப்பட்ட வழக்கறிஞர் இறந்த நாள்

ஆர்ச்சிபால்ட் காக்ஸ் எழுபதுகளில் அமெரிக்காவின் அரசியலில் புயலை உருவாக்கிய ‘வாட்டர்கேட்' ஊழலில், அந்நாட்டின் அதிபர் நிக்சனுக்கு எதிராக இருந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர்ச்சிபால்ட் காக்ஸ் இறந்த நாள் இன்று.

ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற காக்ஸ், இரண்டாம் உலகப்போரின்போது, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு வாரியத்தில் பணியமர்த்தப்பட்டார். போருக்குப் பின்னர், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

அவரது பெயர் வரலாற்றில் இடம்பெற முக்கியக் காரணம் ‘வாட்டர்கேட்' ஊழல்தான். அப்போதைய எதிர்க் கட்சியாக இருந்த ஜனநாயகக் கட்சி அலுவல கமான வாட்டர்கேட் கட்டிடத்தின் அறைகளில் ரகசியமாக ஒலிப்பதிவுக் கருவிகளைப் பொருத்தி ஒட்டுக்கேட்டதாக எழுந்த புகாரில், அதிபர் நிக்சன் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கமாக எல்லா அரசியல் தலைவர்களும் செய்வதுபோல, இந்த ஊழல் புகாரை நீர்த்துப்போகச் செய்ய நிக்சன் இயன்ற அளவு முயன்றார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக, 1973-ல் ஆர்ச்சிபால்ட் காக்ஸ் நியமிக்கப்பட்டார். ஊழலில் நிக்சனுக்கு நேரடித் தொடர்பு இருப்பதற்கான சான்றுகளை காக்ஸ் சேகரித்தார். இதையடுத்து, காக்ஸுக்கும், மாவட்ட நீதிபதி ஜான் சிரிக்காவுக்கும் பல நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டன. நெருக்கடி முற்றிய நிலையில், 1973-ம் ஆண்டு, அக்டோபர் 20-ம் தேதி, பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த காக்ஸ், நிக்சனின் நிபந்தனைகளுக்கு உடன்படப் போவதில்லை என்று தெரிவித்தார்.

‘சனிக்கிழமை இரவின் படுகொலை' என்று பத்திரிகையாளர்கள் குறிப்பிடும் அந்த இரவில், காக்ஸைப் பதவிநீக்கம் செய்ய அரசுத் தலைமை வழக்கறிஞர் எல்லியட் ரிச்சர்ட்சனுக்கு, நிக்சன் உத்தரவிட்டார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத எல்லியட் பதவி விலகினார். அதற்குப் பின்னர், பதவி யேற்ற வில்லியம் ரக்கில்ஷாஸும் இதே காரணத் துக்காகப் பதவி விலகினார். விவகாரம் மிகப் பெரிய அளவுக்கு வெடித்ததால் வேறு வழியின்றி, 1974-ம் ஆண்டு, ஆகஸ்ட் 9-ம் தேதி, நிக்சன் பதவி விலகினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x